பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கவிஞர் கு. சா. கி.

இவர் நடிப்பதற்காகவே ஒரே நாள் இரவுக்குள் அபிமன்யு சுந்தரி என்னும் நாடகத்தை எழுதி, அதன் கதாநாயகனாக சண்முகத்தைத் தயாரித்து திறமையாக நடிக்க வைத்து மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் கொண்டார். சில ஆண்டுகளில் தம்பி பகவதியும் நடிகரானார். அதன் பிறகு சதாவதானம் பாவலர் நாடகக்குழுவில் சில ஆண்டுகள் நடித்துப் புகழ் பெற்றனர். 1921-23ம் ஆண்டுகளில் டி, கே. சண்முகத்தின் வயது11 அல்லது 12 இருக்கும். அக் காலத்தில் மனோகரன் நாடகத்தில் மனோகரனாக நடித்த சண்முகம் நடிப்பின் சிறப்புபற்றித் திரு. பம்மல் சம்பந்தமுதலியார் அவர்கள் அவரது இறுதிக்காலம் வரை புகழ்ந்து பேசிப் பாராட்டி யதை நானே பலமுறை கேட்டிருக்கிறேன்.

நாடக நால்வர்கள் தங்களுக்கென்று சொந்தமாக மதுரை பூரீ பால சண்முகாநந்த சபா என்ற அமைப்பை 1925-ம் ஆண்டு துவக்கினார்கள். பல ஆண்டுகள் எல்லோரை யும் போல் புராண இதிகாச நாடகங்களைத்தான் நடத்தி வந்தனர். பிறகு திரு. கந்தசாமி முதலியாரை ஆசிரியராக ஏற்று, அன்னாரின் பயிற்சியால் ராஜாம்பாள், ராஜேந்திரா, ஆனந்தகிருஷ்ணன், மோகன சுந்தரம், சந்திரகாந்தா, கள்வர் தலைவன் மேனகா போன்ற சமுதாய சீர்திருத்த நாடகங்களை நடத்தி வெற்றி கண்டனர்.

இதன் பிறகு, திரு.டி.கே முத்துசாமி அவர்களே குமாஸ்தாவின் பெண் என்ற புரட்சிகரமான சீர்திருத்த நாடகத்தையும், ராஜா பர்த்ருஹரி, காளமேகப் புலவர் போன்ற இதிகாச வரலாற்று நாடகங்களையும் எழுதி, அரங் கேற்றி மிகப் புகழ்பெற்றனர்.

சமூகத்தின் புல்லுருவிகளாகத் திரியும் போலிச் சாமி யார்களின் கேலிக்கூத்துக்களைப் படம் பிடித்துக்காட்டும் வித்யாசாகரர் என்ற நாடகம், இவர்களின் அருமையான படைப்பு. தேசீய எழுச்சியும், சமுக சீர்திருத்த ஆர்வமும், தமிழ்ப் பற்றும். இனப்பற்றும் நிறைந்த நண்பர்