பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கவிஞர் கு. சா. கி.

கொண்டு உற்சாகப்படுத்தி, அவற்றிலுள்ள நல்ல அம்சத் தையே மையக் கருத்தாக வைத்து, ஒரு முழுநேர மேடை நாடகமாக எழுதிக் கொடுக்குமாறு வற்புறுத்தி, காட்சித் தொகுப்பு முதல் நாடகத்திற்கான எல்லாச் சிறப்பு உத்தி களையும் உடனிருந்து எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் தம் சொந்தப் பொறுப்பி லேயே செய்து கொடுத்து, ஒரு நல்ல நாடகத்தை உரு வாக்கி, மேடையேற்றி நடித்து, எழுதியவருக்கு நல்ல நாட காசிரியர் என்ற சிறப்பையும் புகழையும் பொருளையும் வழங்கி, அதிலே மகிழ்ச்சி காணும் பேருள்ளம் கொண்ட கலைஞர் திரு. அவ்வை.சண்முகம்

ஒரு தலைசிறந்த நாடகாசிரியனுக்குள்ள தகுதி, உரை நடைத்திறம், கவிதை-இசைப் பாடல் எழுதும் ஆற்றல் இத்தனை சிறப்புக்களும் பெற்றிருந்தும், அந்த சிறப்பை யெல்லாம் மற்றவர்க்கே பயன்படுத்தி மகிழ்ச்சி கானும் தாயுள்ளத்தை நாடகக்கலை உலகில் அவர் ஒருவரிடம்தான் நான் கண்டேன். இங்ங்ணம் அவர் அரும்பாடுபட்டு தயாரித்து அரங்கேற்றிய நாடகங்கள் ஏராளம் குறிப்பாக, விடுதலை வேட்கையைத் தூண்டியதும் பலமுறை தடைவிதிக்கப்பட்டது மாகிய திரு. வெ. சாமினாத சர்மாவின் தேசபக்தி; டி. கே. முத்துச்சாமியின் குமாஸ்தாவின் பெண், காளமேகப்புலவர், வித்தியாசாகரர், புதுக்கோட்டை தம்புடு பாகவதரின் துருவன், பக்த ராமதாஸ்; சதாவதானம் டி.பி. கிருஷ்ணசாமிப் பாவலரின் கதரின் வெற்றி, தேசியக் கொடி, பம்பாய்மெயில், பதிபக்தி, கவர்னர்ஸ் கப், ராஜா பர்த்ருஹரி, சூலமங்கலம் வைத்தியநாத பாகவதரின் சிவலிலா.

கு சா கிருஷ்ணமூர்த்தியாகிய எனது அந்தமான் கைதி; ப நீலகண்டனின் முள்ளில் ரோஜா, பா. ஆதிமுலம் நா. சோமு ஆகியோரின் மனிதன், நாரண துரைக்கண்ண னின் உயிரோவியம்; ஏ. எஸ். ஏ. சாமியின் பில்ஹணன், பி. எத்திராஜுலுவின் ஒளவையார்; நா. சோமசுந்தரத்தின்