பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 215

இன்ஸ்பெக்டர்; சி வி பூரீதரின் எதிர்பாராதது.ரத்தப்பாசம், கல்கியின் கள்வனின் காதலி (நாடக ஆக்கம் எஸ்.டி. சுந்தரம்); அரு. ராமநாதனின் ராஜராஜ சோழன்; டி.கே. கோவிந்தனின் எது வாழ்வு; நா. பாண்டுரங்கனின் சித்தர் மகள், கல்கியின் சிவகாமியின் சபதம் (நாடக ஆக்கம் புத்தநேரி சுப்பிரமணியம்) பிலஹரியின் பாசத்தின் பரிசு; கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தமிழ்ச்செல்வம்:திருச்சிபாரதனின் அப்பாவின் ஆசை, பலாப்பழம்; வேணுகோபாலின் அமைச்சர் மதுரகவி. ரா. வேங்கடாசலத்தின் இமயத்தில் நாம், முதல் முழக்கம், மனைவி; அகிலனின் புயல், வாழ்வில் இன்பம், உயிர்ப் பலி, சேலம் சித்தையனின் கப்பலோட்டிய தமிழன் ஆகிய எண்ணற்ற ஒப்புயர்வற்ற நாடகங்களை அரங்கேற்றித் தமிழகம் எங்கும் புகழ்பெற்று விளங்கிய தங்களின் நிரந்தர நாடகக் குழுவுக்கு, 1950ஆம் ஆண்டு சென்னையில் மூடுவிழா நடத்தியதும் ஒரு புதுமையான செயலாகும்.

அதற்குப் பிறகும், கலை உள்ளத்தின் எழுச்சியின் காரண மாகத் தனது குழுவினரைக் கொண்டே பல புதிய நாடகங் களைத் தயாரித்து தமிழகம், பிறமாநிலங்கள், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா முதலிய பல்வேறு நாடுகளிலும் ஏறத் தாழ 15 ஆண்டுகளுக்கு மேல் கலைத்தொண்டு புரிந்து, நாடக வேந்தராகத் திகழ்ந்த ஒளவை சண்முகத்தை கலையுலகத்தின் சிகரமென்றே சொல்லவேண்டும்.

டி.கே.எஸ். சகோதரர்கள் பல நூற்றுக்கணக்கான தேசீய மன்றங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், பத் திரிகை வளர்ச்சிக்கும், தேசீயத் தலைவர்களுக்கும் சுய விளம்பரமின்றி லட்சக்கணக்கான ரூபாய்களை நிதி உதவி யாக வழங்கியுள்ளார்கள் என்பது பலருக்கும் தெரியாத விஷய மாகும்.

மதுரைத் தமிழ்ச்சங்கம் இவர்களுக்கு முத்தமிழ்க் கலா வித்வ ரத்தினங்கள் என்ற விருதையும், ஈரோடு நாடகக்கலை மாநாட்டில், ஆர்.கே. சண்முகம் அவர்களால் அவ்வை என்ற சிறப்பு விருதையும், புதுவை இராமகிருஷ்ணா பாடசாலை