பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 கவிஞர் கு. சா. கி.

யினர் நாடக வேந்தர் என்ற விருதையும், பாரிவிழாவில் குன்றக்குடி அடிகளாரால் நடிகர்கோ என்ற பட்டத்தையும், நாகர்கோவில் பாராட்டு விழாவில் முத்தமிழ்த் திலகம் என்ற விருதையும், இயலிசை நாடக மன்றத்தினரால் கலைமாமணி விருதும், மற்றும் எண்ணற்ற சிறப்பு விருதுகளையும் பெற்ற டி.கே. சண்முகம் நூற்றுக்கணக்கான நகரமன்றங்கள், கலை மன்றங்களின் வரவேற்பு மடல்களையும் பெற்ற, ஒப்பாரும் மிக்காருமற்ற நடிகக் கலைமன்னனாகத் திகழ்ந்தவர்.

செல்வாக்குள்ளஒரு தனி மனிதரின் உரிமைச் சொத்தாகச் சிறைப்பட்டுக் கிடந்த அமரகவி பாரதியாரின் கவிதைச் செல்வத்தைத் தேசீயப் பொதுச் சொத்தாக மாற்ற வேண்டு மென்பதற்காக அவர் நடத்திய இயக்கம், அந்தப் போராட் டத்தில் அவர் கண்ட வெற்றி நாடறிந்த ஒன்றாகும்.

நாடக, நாட்டிய இசைத்துறைக் கலைஞர்கள் இன்று அனுபவித்து வரும் ரயில் பயணக் கட்டணச் சலுகைக்காக ஒளவை சண்முகம் எடுத்துக்கொண்ட முயற்சி, நடத்திய போராட்டங்கள் கொஞ்சமல்ல. இதற்காகக் கலைஞர்கள் அனைவருமே அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

சண்முகம் பெரிய லட்சாதிபதியாக இருக்கவில்லை என் பதை நாம் அறிவோம். என்றாலும், வறுமையில் வாடும் நடிகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் ஆகிய பலருக்கும் தன்னால் இயன்ற அளவு விளம்பரமின்றிப் பொருளுதவி செய்துவந்தார் என்பதையும் நான் அறிவேன். சண்முகத்தின் தொடர்பாலும் நட்பாலும் நாடகத் துறைக்கு இழுக்கப்பெற்றோர். பலர் என்பதைச் சொன்னேன். இதில் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவருள் அறிஞர் அண்ணா வும் ஒருவர் என்பது பலருக்குத் தெரியாத ரகசியமாகும்.

ஈரோட்டில் தொடர்ந்து நாடகம் நடந்த காலத்தில் விடுதலையின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய அண்ணா அவர்கள், டி.கே. எஸ். நாடகங்களைக் கண்டு நாடகக்கலை யில் ஈடுபாடு கொண்டதையும் அவர்களின் குமாஸ்தாவின் பெண் என்ற நாடகக் கதையின் தொடர் பகுதியாக ஒரு