பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

தம் தமிழ் மொழி வரலாற்றில், சிறப்புடைய நாடகக்கலை

வளர்ந்து வந்தபோது நம் நாட்டில் செல்வாக்குப் பெற்ற

புத்தமும் சமணமும் நாடகம் காமத்தை மிகுதிப்படுத்து

வதென்று தவறாக எண்ணினர். அதனால் அவர்கள் செல்

வாக்கு மிகுந்திருந்த காலத்தில் நாடகத் தமிழை வளர

வொட்டாது தடுத்தனர்' என்று குறிப்பிடக் காணலாம்.

நூலாசிரியர் சிலப்பதிகார காலத்திற்குப் பின்னே 19-ஆம்

நூற்றாண்டின் இறுதிவரையிலுள்ள காலத்தை இடைக்கால

மாகக் கொண்டு இச்செய்திகளை ஆய்கிறார். ஆய்வின்

பயனாக, 'நாடகத்தைப் பொறுத்தவரை சிலப்பதிகாரத்

திற்குப் பின் 17-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இருண்ட காலமென்றே சொல்ல வேண்டும் என்கிறார். 17-ஆம்

நூற்றாண்டிற்குப் பிறகு நொண்டி நாடகங்கள், குறவஞ்சி

நாடகங்கள், பள்ளு நாடகங்கள், மந்தை நாடகங்கள் போன்ற நாடகங்கள் நடத்தப்பட்டு வந்தன என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

இக்காலம்

19-ஆம் நூற்றாண்டின் இடையிலும் இறுதியிலும் நாடகக் கலை மறுமலர்ச்சி பெற்றது. 18-ஆம் நூற்றாண்டி, லும், 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இசைப்பாடல் களால் ஆக்கப் பெற்ற நாடகங்களைக் காணலாம். இதில் உரைநடை குறைவாக இருக்கும். ஆங்கில ஆட்சி, ஆங்கிலக் கல்வி நம்நாட்டில் வேரூன்றியதன் காரணமாக இந்திய நாடக உலகிலும், தமிழ்நாடக உலகிலும் குறிப்பிடத்தக்க மாறுதல் உண்டாகியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உரையாடலும், பாடலும் அமையுமாறு பல நாடகங்கள் எழுதப்பெற்றுள்ளன. மேலைநாட்டுப் புதினங் களைத் தழுவி நாடக உத்திகளைக் கையாளும் முறை தோன். றியது. பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், ! சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் போன்ற பெரும் புலவர்கள் நாடகங்களை எழுதியும் நடத்தியும் வந்த அருந்: