பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கவிஞர் கு. சா. கி.

தலைவராகவும், மற்றும் எத்தனையோ பொது நிர்வாகங்களி லும் பங்கேற்று உழைத்தார். சென்னைப் பல்கலைக் கழகத் தில் பம்மல் சம்பந்த முதலியார் அறக்கட்டளைக்கும், மதுரைப் பல்கலைக் கழகத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் அறக்கட்டளைக் கும் பெருமுயற்சியெடுத்து வெற்றி கண்டார். பாரதப் பேரரசின் குடியரசுத் தலைவர், இக்கலைப் பேரரசருக்குப் பத்மபூரீ விருதளித்துச் சிறப்பித்தது மிகமிகப் பொருத்தமான செயலாகும்.

பிற்காலத்தில் சிறந்து விளங்கிய கலைவாணர் என்.எஸ். கே. , எஸ். வி. சகஸ்ரநாமம், எஸ்.வி. சுப்பையா, டி.என். சிவதாணு, சங்கீத வித்வான் டி.எம். தியாகராஜன், நடன ஆசிரியர் கே. என். தண்டாயுதபாணி, திரைப்பட இயக்கு னர்கள் ஏ.பி. நாகராஜன், ஏ. எஸ். ஏ. சாமி, ப. நீலகண்டன், சி.வி. பூரீதர், ஆர்.டி. மகாலிங்கம், எம். ஆர். சாமினாதன், கே. பி. காமாட்சி, பிரண்ட் ராமசாமி, எம்.எஸ். துரோபதை, டி.ஏ. ஜெயலட்சுமி, கே.ஆர். ராமசாமி, குண்டு கருப்பையா மற்றும் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான கலைஞர்களின் புகழுக்கு நுழைவாயிலாக அமைந்தது, டி.கே.எஸ். நாடகக் குழுவே என்பதை பெருமையோடு சொல்லலாம். கலையுலகில் இன்னொருவரை ஈடுசொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து நின்ற அவ்வை சண்முகம் அவர்களின் இழப்பைக் காலம்தான் ஈடு செய்ய வேண்டும்.

பல்வேறு நாடக சபைகளின் தோற்றம்

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, ஜெகன்னாத ஐயரின் மதுரை பால மீனரஞ்சனி சங்கீதசபா, சி. கன்னையா அவர்களின் சென்னை இந்து வினோத நாடகசபா, டி. கே. எஸ். சகோதரர்களின் சண்முகானந்த சபா, கி. சீனிவாசப் பிள்ளையின் நாடகக் குழு, இவற்றைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான நாடக சபைகள் தோன்றின. இவற்றில் குறிப்பிடத்தக்க நாடக சபைகள் பல.