பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 219

எட்டையபுரம் இளைய மகாராஜா ஒரு நாடகக் குழுவைத் தொடங்கிச் சில ஆண்டுகள் நடத்தினார். இவர் தாமே நாடகம் எழுதும் திறமும், காட்சிகளுக்கான திரைச் சீலைகளை எழுதும் ஒவியத் திறமையும் பெற்றவர். கலை யார்வம் காரணமாக இதைத் தனது பொழுதுபோக்காகக் கொண்டு கலைப்பணியாற்றினார். தயாளன் என்ற ஒரு அருமையான நாடகத்தை எழுதித் தயாரித்து நடத்தி மகிழ்ந் தாா.

புளியம்பட்டி திரு. சுப்பாரெட்டியார் என்பார், பல ஆண்டுகள் ஒரு பாலர் நாடக சபையை நடத்தினார். இந்தச் சபையில் புகழ் பெற்ற நடிகர்கள்தான் பி.எஸ். கோவிந்தன், மயில்வாகனம், காளீஸ்வரன் போன்றவர்கள். இக்குழுவினர், தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலும் நாடகங்களை நடத்திப் புகழ் பெற்றனர்.

மற்றும், திருச்சி பால பாரத சபா, சென்னை என்.வி. சண்முகம் பட்டணம் பொடிக் கம்பெனியார் நடத்திய பாலர் நாடக சபா, எஸ்.ஆர். ஜானகி, எஸ்.என். ராஜாம்பாள் ஆகியோரின் வளர்ப்புத் தந்தையார் ஓவியர் திரு. பொன்னு சாமிபிள்ளை நடத்திய தந்திமுகானந்த சபா, கே. எஸ். செல்லப்பா, அனந்த நாராயண அய்யர் நடத்திய ஆரியகான சபா, டி.எம். மொய்தீன் சாகீப் நடத்திய ராமானுகூல சபா, பழனியா பிள்ளை கம்பெனி, பக்கிரி ராஜாக் கம்பெனி, சி.எஸ். சாமண்ணா ஐயர் கம்பெனி, சின்னையா பிள்ளை கம்பெனி, பி. ராஜாம்பாள் கம்பெனி, வீரராகவ முதலியார் கம்பெனி, எஸ்.என். விஜயலட்சுமி கண்ணாமணி கம்பெனி, சுந்தரராவ் கம்பெனி, பரசுராமபிள்ளை கம்பெனி, மற்றும் எத்தனையோ நாடக நிறுவனங்கள் தோன்றித் தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி, கேரளம், கர்நாடகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடுகளிலும் புகழ் பெற்று விளங்கின.