பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 221

நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் திரு. கே. ஆர்.

ராமசாமி அவர்களுக்கு நடிப்பிசைப் புலவர்' என்ற சிறப்புப் பட்டம் வழங்கப் பெற்றது. இதில் நானும் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

திரு. பி. ஜெகன்னாதய்யரின் கம்பெனி நின்றுபோனதற் குப் பிறகு, அதிலிருந்த பலநடிக நண்பர்களை ஒன்றுசேர்த்து, திரு. எதார்த்தம் டி.பி. பொன்னுசாமி பிள்ளை அவர்களும், மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து, பூரீ மங்கள பால, கான சபா என்னும் ஒரு நாடக நிறுவனத்தைத் தொடங்கி, ராமாயணம், கிருஷ்ணலீலா போன்ற பல பழைய நாடகங் களுடன், திருச்சி சிட்டி அமைச்சூர் சபையின் இழந்த காதல், விமலா அல்லது விதவையின்கண்ணிர் என்ற அருமை யான துன்பியல் சீர்திருத்த நாடகங்களையும் நடத்தி வந்தார்கள். இந்த நாடகசபையின் மூலம் கலையுலகிற்குக் கிடைத்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

பூரீமங்களபாலகான சபையின் உரிமையைக் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாங்கி, என். எஸ். கே. நாடகசபை என்ற பெயரில், சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் கே. ஆர். ராமசாமி, வி.கே. ராமசாமி, எஸ்.வி சகஸ்ரநாமம் ஆகியோர்களைக் கொண்டு மனோரமா, பூம்பாவை ஆகிய நாடகங்களைச் சிறப்பாக நடத்தினார்கள். பிறகு நண்பர் திரு. ப. நீலகண்டன் அவர்களைக் கலைவாணருக்கு நான் தான் அறிமுகம் செய்துவைத்து, நாமிருவர் நாடகத்தை அரங்கேற்றத் துணைபுரிந்தேன் பின், எஸ். வி. சகஸ்ரநாமம் அவர்கள் பைத்தியக்காரன் என்ற நாடகத்தைத் தாமே எழுதி அரங்கேற்றினார்.

இந்த சமயத்தில், லட்சுமிகாந்தன் என்ற மஞ்சள் பத்திரிகையின் ஆசிரியர் கொலை வழக்கு சம்பந்தமாகக் கலைவாணர் அவர்களும், எம். கே. தியாகராஜ பாகவதர்