பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கவிஞர் கு. சா. கி.

அவர்களும் அநியாயமாகச் சிறைபுக நேர்ந்ததன் காரண மாக, என் எஸ். கே. நாடக சபையின் நிர்வாகப் பொறுப்பை திரு. எஸ். வி. சகஸ்ரநாமம் ஏற்று நடத்தினார்.

திரைப் படத் துறையில் புகழ்பெற்று விளங்கிய எம்.கே. டி. பாகவதர் இல்லாத குறையை நிறைவு செய்ய, அன்று பாடும் நட்சத்திரமாக விளங்கிய திரு. கே. ஆர். ராமசாமிக்கு ஏராளமான திரைப்பட ஒப்பந்தங்களும், அளவற்ற வருமான மும், ஏககாலத்தில் வந்து குவிந்தன. அந்தப் பணத்தைக் கொண்டு தனது வாழ்க்கையின் லட்சிய தெய்வமாக விளங்கிய அறிஞர் அண்ணாவின் நாடகங்களை அரங்கேற்ற வும், அதன் மூலம் அவரது சீர்திருத்தக் கருத்துக்களை நாட்டு மக்களிடையே பரப்பவும் திட்டமிட்டு, லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலலிட்டு, காட்சித் திரைகள், உடைகள் அனைத்தும் புதிதாகவே தயாரித்து, கிருஷ்ணன் நாடக சபா என்ற பெயரில், தஞ்சாவூரில் நாடகக் குழுவைத் தொடங்கி, 1946-ம் ஆண்டில் அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு நாடகத் கையும், அதற்குப் பின் வேலைக்காரி நாடகத்தையும் மிகப் பெரிய விளம்பரத்தோடும் நிறைந்த வசூலுடன் நடத் தினார்கள். இந்த நாடகங்களுக்குத் தலைமை வகிக்காத அறிஞர்களோ அரசியல் தலைவர்களோ இல்லை என்ற அளவுக்க-எல்லாக் கட்சிப் பிரமுகர்களும் தலைமை வகித்து. நாடகத்தை-நாடகாசிரியர் அறிஞர் அண்ணாவை மன நிறைவுடன் பாராட்டினார்கள்; ஆசிரியர் கல்கி அவர்கள் "இதோ ஒரு பெர்னாட்ஷா தமிழ்நாட்டில் இருக்கிறார்' என்று தமது விமரிசனத்தில் எழுதினார்.

இந்த நாடகங்களுக்கிடையே, அண்ணா அதற்கு முன்பே எழுதிக் கட்சி மாநாட்டு மேடைகளில் எல்லாம் தாமே வேடம் தாங்கி நடித்துப் புகழ்பெற்ற சந்திரமோகன், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் போன்ற நாடகங்களும் நடிக்கப் பெற்றன. இறுதியில் அதே ஊரில் தஞ்சை ராம நாதன் செட்டியார் கலையரங்கில் எனது புதிய நாடகம் ஒன்றும் ஓர் இரவு, வேலைக்காரிக்குப்பின் அரங்கேற்.