பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கவிஞர் கு. சா. கி

கொடுமை! கொடுமை! கொடுமை!-விடுதலையடைந்தும் பணம் படைத்தோர் கொடுமை நீங்கவில்லையே'

கருங்காலி வீரப்பன் வருகிறான். நிலைமையைப் புரிந்து அவனே அதிர்ச்சியுற்றுச் சீறுகிறான். மானேஜர் அலட்சிய மாக, ஒரு கத்தை நோட்டை வீசி, "ஏய் போடா அழைத்துக் கொண்டு' என்று கூறிச் செல்ல, அந்தப்பெண் வீரையனைக் கண்டு அண்ணா என்று அலறுகிறாள். காட்சி முடிகிறது

அடுத்த காட்சியில் வீரையனும் அந்தப் பெண்ணும் அவர்கள் குடிசையை நெருங்கும்போதே அந்தப் பெண்ணின் தாய் இறந்துகிடக்கிறாள். அந்தப் பெண் விழுந்து புரண்டு முட்டிமோதிக்கொண்டு புலம்புகிறாள். வீரையன் சமாதானம் செய்து 'பணத்தை பிரேத அடக்கத்திற்கு வைத்துக்கொள்' என்று சொல்லிக் கொடுக்க, அதை அவன் முகத்திலேயே வீசி விரட்டுகிறாள்.

அடுத்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் களையே புரட்சிக்காரர்களாக மாற்றிய மற்றொரு காட்சியை கூறி இதை முடிக்கலாமென்று நினைக்கிறேன்.

மில்லில் கதவடைப்பு. வேலையிழந்த தொழிலாளர்கள் போராட்டத்திற்கும் புரட்சிக்கும் தயாராகிக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தும் முறையில், தொழிலாளர் தலைவன் ஒரு உயரமான மேடை யில் நின்று, "வன்முறை நிரந்தர வெற்றியைத் தராது. அகிம்சை வழியில் காந்தீய நெறியில் பேசித் தீர்த்து நம் உரிமைகளைப் பெற வேண்டும்' என்று உரையாற்றிக் கொண்டிருக்கிறான். எங்கிருந்தோ விர்ரென்று வந்த ஒரு கல் தலைவனின் மண்டையைப் பிளக்கிறது. தொழிலாளர்களின் ஆத்திர உணர்ச்சி கட்டுமீறிப் போகிறது. ஊர்வலமாகப் புறப்படுகின்றனர். அடிபட்ட காயத்தில் ரத்தக் கறை படிந்த கைக்கு மட்டும் வட்டமான ஒளி... இகளில் பேரணி திரண்டு செல்கிறது. பின்னணியில் காட்சி விளக்கப் பாடல் குழுவிசை யாக ஒலிக்கிறது.