பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 கவிஞர் கு. சா. கி.

முகாமிட்டு நாடகங்களை நடத்தினார்கள். இறுதியில் சென்னை வந்த பிறகு செயலிழந்து நிறுத்தப் பெற்றது.

நான் எழுதிய அந்தமான் கைதியைவிட, எத்தனையோ வகையில் சிறந்த நாடகமாகிய 'என் காணிக்கை', நான் எதிர்பார்த்த அளவு வெற்றியடையாது போனதற்குக் காரணம், நாடகம் சரியான இடத்திலே சேர்க்கப்படாதது தான் என்பதை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை.

கலைவாணர் என்.எஸ் கே. நாடகக் குழுவிலிருந்து திரு. கே.ஆர். ராமசாமி விலகி கிருஷ்ணன் நாடக சபா தொடங்கிய சில ஆண்டுகளுக்குப் பிறகு, திரு. எஸ். வி. சகஸ்ரநாமம் அவர்களும் விலகி, சேவாஸ்டேஜ் என்ற பெயரில் ஒரு நாடக நிறுவனத்தைத் தொடங்கிப் பல ஆண்டு கள் சிறப்பாக நடத்தினார். என். வி. ராஜாமணி எழுதிய கண்கள், இருளும் ஒளியும். குகன் எழுதிய புகழ்வழி, .தி. ஜானகிராமன் எழுதிய நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார், கல்கியின் மோகினித்தீவு, பி.எஸ். ராமையா எழுதிய பிரசிடென்ட் பஞ்சாட்சரம், மல்லியம் மங்களம், போலீஸ்காரன் மகள், தேரோட்டி மகன், பாரதியாரின் பாஞ்சாலிசபதம் போன்ற பல நல்ல நாடகங்களை இந்த நிறுவனம் சிறப்பாக அரங்கேற்றியது.

நாடகக்கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி, இளைஞர் களுக்குப் பயிற்சி யளிப்பதற்காகத் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் 1967-ம் ஆண்டு இவர்களுக்கு மூவாயிரம் ரூபாய் மானியம் வழங்கியது.

சக்தி நாடகசபா

1945-ம் ஆண்டு நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நிறுவனத்திலிருந்து விலகிய டி.கே. கிருஷ்ணசாமி அவர்கள், சக்தி நாடகசபையை நாகபட்டினத்தில் தொடங்கி, திருச்சி, Garణమి, சென்னை முதலிய பல ஊர்களில் நடத்தினார் **6;f . எஸ்.டி. சுந்தரம் எழுதிய கவியின் கன வு