பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 229

டி.கே. கிருஷ்ணசாமியே எழுதிய விதி, ஜீவன், ஜஹாங்கீர் முதலிய சிறப்பான நாடகங்கள் அரங்கேறின. காட்சிஅமைப்பு. களில் பல புதுமைகளைச் செய்தார். சிவாஜி கணேசன், எம். என் நம்பியார், எஸ். வி. சுப்பையா போன்ற பண்பட்ட நடிகர்கள் நடித்தார்கள், நாடகங்களுக்கு நல்ல வரவேற்பும் பத்திரிகைகளின் பாராட்டும் கிடைத்தன. ஆயினும், தொடர்ந்து நடத்தமுடியாமல் சில ஆண்டுகளில் நிறுத்தப் பட்டு விட்டது.

தேவி நாடக சபா

சக்தி நாடக சபையிலிருந்து விலகிய திரு. கே. என். ரெத்தினம் தேவி நாடக சபையைத் தொடங்கினார். 1947-ல் தொடங்கிய இந்த நிறுவனத்தை 1977 வரை எத்தனையோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையே தொடர்ந்து நடத்தி வந்த திரு. கே. என். ரெத்தினம், அண்மையில் காலமானார் என்ற செய்தியறிந்த உண்மையின் நான் மிகவும் வேதனை யடைந்தேன். காரணம்; பழைய தொழில்முறை நாடக நிறுவனங்களின் நினைவுச்சின்னமாக கன்னையா, நவாப், டி. கே. எஸ்.நிறுவனங்களைப்போலப் பெரியஅளவில் இல்லா விட்டாலும், பொன் வைத்த இடத்தில் பூ வைப்பது போல், நடுத்தர, சிறிய நகரப் பகுதிகளையே நம்பி, தொடர்ந்து நடைபெற்று வந்த கடைசி நாடக நிறுவனம் கே. என். ரெத்தினம் அவர்களின் தேவி நாடக சபை ஒன்றே ஒன்று தான். அவர் மறைவின் காரணமாக, அந்தச்சபையும் மூடப் பட்டு விட்டது என்றால், நமது பழைய நிரந்தரத் தொழில் முறை நாடக சகாப்தமே முடிந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

முதன் முதலாகக் கலைஞர் மு. கருணாநிதி கதைவசனம் எழுதி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்துத் திரைப்படமாக வெளிவந்த மந்திரிகுமாரி, பாவலர் பாலசுந்தரம் எழுதி சிவாஜிகணேசன் நடித்துத் திரைப்படமாக வந்த பராசக்தி