பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கவிஞர் கு. சா. கி.

ரா. வெங்கடாஜலம் எழுதி வைஜயந்திமாலா நடித்து, ஏ. வி. எம் படமாக வந்த பெண். அனுஜன் எழுதி எஸ்.எஸ். ஆர். நடித்து எம். ஏ. வேணு தயாரித்த முதலாளி; எம், எஸ். சோலைமலைஎழுதி கே.ஆர்.ராமசாமிநடித்த நீதிபதி, மற்றும் ஏ. கே. வேலன் எழுதிய சூறாவளி, கா.மு. ஷெரீப் எழுதிய வாடாமல்லி, பொற்கொடி போன்ற எண்ணற்றநாடகங்களை மேடையேற்றி வெற்றிகண்ட பெருமை, தேவி நாடக சபைக்கு உண்டு. கட்டுக்கோப்போடு பயிற்சி பெற்ற நிரந்தர நாடகக் குழுவின் கடைசி அத்தியாயம் இத்துடன் முடிவுக்கு வருவதில் உள்ள ஈடு செய்ய முடியாத இழப்பை, நாடக நுணுக்கத்தை உணர்ந்தவர்களால்தான் அறிந்து கொள்ள முடியும். இனி, இம்மாதிரிப் பழைய முறை நாடகக் குழு ஒன்றைத் துவக்கி நடத்துவதென்பது அத்தனை எளிதான காரியம் இல்லை. அந்தக் காலம் எப்போது தோன்றுமோ? மீண்டும் நாடகக்கலை என்று தலையெடுக்குமோ? இதை நினைக்கும்போதே, என்நெஞ்சம்வேதனையில்விம்முகின்றது. கடைசியாக நடைபெற்றுவந்த டி. கே. எஸ் குழுவும் எஸ்.வி. சகஸ்ரநாமம் அவர்களின் சேவா ஸ்டேஜாம், கே. என். ரெத்தினம் அவர்களின் நாடக சபையும் நின்று விட்டன. புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். முன்பு சிலகாலம், இன்ப இரவு, அட்வகேட் அமரன் என்ற நாடகங்களையும், நடிகர்திலகம் சிவாஜிகணேசன் வீரபாண்டியக்கட்டபொம்மன் வியட்நாம்வீடு போன்ற சில நாடகங்களையும் அத்திபூத்தாற் போல் எப்போதோ ஓரிரு சமயம் நடத்திவந்தார்கள்.

இப்போது எல்லோரும் மூடுவிழா நடத்திவிட்டனர்.

திரு.வி.கே. ராமசாமி ருத்ரதாண்டவம் என்ற நாடகத் தையும், மனோரமா சில நாடகங்களையும் நடத்துகின்றனர். இவையெல்லாம் வெறும் சினிமாக்கவர்ச்சியை நம்பி நடப் பவையே ஆகும். ஆர். எஸ். மனோகரின் நாடகங்கள்

மேலே சொன்ன நாடகக் குழுக்களெல்லாம் மறைந்து விட்டாலும், இன்று ஆர்.எஸ்.மனோகரின் புதுமையான ஒளி,