பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 231

ஒலி , அமைப்புகளுடன் கூடிய காட்சி அமைப்புக்கள் கொண்ட, புராண வரலாற்று நாடகங்கள் சிறப்பாக நடை பெற்று வருகின்றன! இது நாடகக்கலையின் வளர்ச்சியைக் காட்டவில்லையா? என்று கேட்கலாம். ஆனால் இது, ஆலை யில்லா ஊருக்கு இலைப்பைப்பூச் சர்க்கரை என்பதைப் போலத்தான்.

ஆர். எஸ். மனோகர் அவர்களின் அரிய முயற்சி, இடை விடாத உழைப்பு, கட்டுக்கடங்காத கலையார்வம், அதற்காக அவர் திரைப்படத்துறை வருவாய்களையெல்லாம்கூட இந்த நாடகக்கலையின் வளர்ச்சிக்காகத் துணிந்து மிகத் தாராள மாகச் செலவு செய்யும் மனப்போக்கு, இவைகளையெல்லாம் எண்ணியெண்ணி, நான் பல சமயங்களில் வியப்பும் மகிழ்ச்சி யும் அடைவதுண்டு.

அதன் காரணமாகவே, ஒருமுறை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழாவில், திரு. மனோகர் அவர் களைப் பாராட்டிக் கேடயம் வழங்க வேண்டுமென்று, நானே மிகவும் வலியுறுத்திம் பரிந்துரை செய்தேன். செயற்குழுவும் எனது வேண்டுகோளை நிறைவேற்றிச் சிறப்பித்தது.

திரு. ஆர். மனோகர் அவர்களின் நேஷனில் தியேட்டர்ஸ் என்னும் நாடக நிறுவனம் 1954-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி, நேரு பிறந்த நாளில் தொடங்கப்பெற்றது.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக, ஒரு நாடக நிறுவனத்தைத் திரைப்படக் கவர்ச்சிப் போட்டிகளுக்கும் ஈடுகொடுத்துத் தொடர்ந்து நடத்துவதென்பது மிகப்பெரிய அசுர சாதனை யென்பதில் ஐயமில்லை.

ஆரம்ப காலங்களில் ஏழெட்டு ஆண்டுகள் நஷ்டத்தி லேயே நடந்த நிலைமாறி, கடந்தஇருபத்தேழு ஆண்டுகளாக லாபத்தையும் காண முடிந்ததென்ற உண்மையை மன நிறைவோடு கூறும் மனோகர், இதற்காகத் தாம் பட்ட கஷ்டங்களையும் மறந்துவிடவில்லை. -