பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 233

முந்தைய தலைமுறையினர்களாகிய வி.பி. ஜானகியம் மாள், ஜி. எஸ். முனுசாமி நாயுடு போன்ற எண்ணற்ற நடிகர்களுக்குப் பிறகு, பைரவ சுந்தரம் பிள்ளை, ஓரடி முத்து வேல்பிள்ளை, பி. எஸ். வேலுநாயர், கே. எஸ். செல்லப்பா, அனந்தநாராயண அய்யர் போன்றோர் புகழ்பெற்று விளங் கினர்.

அதற்குப்பின், கிட்டப்பா சகோதரர்கள், கே.பி, சுந்தராம்பாள், எஸ்.எஸ். விஸ்வநாததாஸ், எம்.எஸ். தாமோதரராவ், எம்.எம். சிதம்பரநாதன், வி. ஏ.செல்லப்பா. டி. பி. ராஜலக்ஷ்மி, எம்.ஆர். கமலவேணி, எஸ்.ஆர். ஜானகி, கே.பி. ஜானகி, எம்.எஸ். விஜயாள், எம். எஸ். தாணுவாம் பாள் ஆகியோருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.

அதன்பிறகு எஸ்.வி. சுப்பையா பாகவதர், விசலூர் எம். எஸ். சுப்ரமணியபாகவதர், எம். கே. தியாகராஜ பாகவதர் ஆகிய பாகவதர்களின் சகாப்தம் ஆரம்பமானது. ஆந்த பாகவதர்களின் வருகைக்குப்பிறகு, கட்டுக்கோப்பான நாடக அமைப்பு முறைக்கு முக்கியத்துவம் குறைந்து, நாடகமேடை வெறும் சங்கீத சண்டமாருத ஸ்வரவின்யாசங்கள் நிறைந்த தாகவும், நடிகருக்கும் ஆர்மோனியக்காரருக்கு மிடையே சங்கீத ஸ்வரசாகித்தியப்போட்டி நிகழ்வதாகவும் இருந்தன. ரசிகர்களும் இந்தப்போட்டியை விரும்பி ரசிக்கத் தயாராகவே இருந்ததால், எந்த நாடகமும் முழுமையாக நடத்த முடியாது. பாகவதர்களின் சில தனிப்பாடல்கள் ஸ்வர ஆவர்த்தனங்களுடன் முடியும்.

ஆரம்ப காலத்தில் வெறும் தத்துவ விதண்டாவாத உரையாடல்களே நிறைந்திருந்த நிலைமாறி, பிறகு தேசீய உரையாடல்களும், தேசபக்திப்பாடல்களும் நிறைந்த இடம் பெற்றன. அதன்பிறகுதான் சங்கீத பாகவதர்களின் சகாப்தம் தோன்றியது.

நல்ல வேளையாக அவர்களுக்குப் பிறகு பொதுவாகப் ಶ್ಗ முறையில் ஸ்பெஷல் நாடகங்கள் குறைந்துபோய் “oil-L-60s.

த.நா.-15