பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 235

பல விதித்தும், பல்வேறு காலங்களில் நாடகக்கலைஞர்களை அடக்குமுறைக் கொடுமைகளுக்கு உட்படுத்தியுள்ளார்கள் என்ற உண்மையை அறிய முடிகிறது.

இதற்குச் சான்றாக, நமது தமிழகத்து அரசியலில் நிகழ்ந்துள்ள வரலாற்று உண்மை நிகழ்ச்சிகளையே எடுத்துக் காட்டி விளக்கிக் கூறலாமென்று நினைக்கின்றேன்.

இங்கே நீதிக்கட்சி என்ற ஒரு அமைப்புத்தோன்றி அறுபது ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது என்பது நம் அனை வருக்கும் தெரியும்.

நீதிக்கட்சியைத் தோற்றுவித்தவர்களும், பின்னே அதில் பங்கு பெற்றவர்களும் சமான்யமானவர்களல்ல. திரு.டி எம். நாயர், சர். தியாகராஜச் செட்டியார், பானகல் ராஜா, சர். பி. டி. ராஜன், பொப்பிலி ராஜா போன்று செல்வமும் செல்வாக்கும் உள்ள பல பெரும்புள்ளிகள், அதன் ஸ்தாபகர்களாக விளங்கினார்கள்.

இந்த இயக்கத்தை வளர்க்கும் செவிலித்தாயாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்தான் திரு. ஈ. வே. ரா. பெரியார் அவர்கள்.

நீதிக் கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம், சுயமரியாதைக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்றெல்லாம் புதுபுதுப் பெயர் மாற்றங்கள் பெற்ற காலங்களிலெல்லாம், எண்ணிக்கை யிலும் திறமையிலு இவர்கள் குறைந்தவர்களல்லர்.

இளமைப் பருவத்தில், அறிஞர் அண்ணா அவர்களின் எழுச்சிலிக்க அடுக்குச்சொல் அலங்கார மேடைப்பேச்சிலும், விடுதலை ஏட்டிலும், திராவிட நாட்டிலும், புரட்சிக்கனல் தெறிக்க வடித்த எழுத்திலும், மயங்காத கல்லூரி மாணவர் களே கிடையாது.

இக்ககைய * m லம் பேச் * 8 -

இததகைய எழுததாற்றலும பச்சாற்றலும் . மிக்க எத்தனையோ பேர்கள் இருந்தும், இடையறாது உழைத்தும்