பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கவிஞர் கு. சா. கி.

கூட நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு வரை, மேற்கண்ட இயக்கங்கள் ஆழமாகப் பரவியதென்றோ, அடித்தளத்து மக்களைக் கவர்ந்ததென்றோ அறுதியிட்டுக் கூறமுடியாது.

ஆனால் அண்ணாவின் சீர்திருத்தம், வாக்குவாதம், வருணாஸ்ரம விமர்சனம், ஆகிய கனல் தெறிக்கும் புரட்சிக் கருத்துக்கள், ஓர் இரவு, வேலைக்காரி, காதல்ஜோதி,சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், நீதி தேவன் மயக்கம் போன்ற பல நாடகங்களாக மேடையில் நடிக்கப்பெற்று, பிறகு திரைப் படங்களாக வெளிவந்து, லம்சக்கணக்கான மக்கள் கண்டு உணர்ச்சிவசப்பட்டதன் காரணமாகத்தான், கடந்துபோன அரைநூற்றாண்டில் காணமுடியாத வெற்றியை, மிகக் குறுகிய காலத்தில் பெற்று அறுபத்தேழில் ஆட்சியையே பிடிக்கும் அளவுக்கு, திராவிட முன்னேற்றக்கழகம் வளர்ச்சி யைக் கண்டது.

நான் இங்கே அரசியல் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம். அது எனக்கு உடன்பாடுமில்லை. நாடகத்தின் வலிமையை, அதன் மூலம் திறமையாகச் செய்யப்படும் பிரசாரத்திற்கு உள்ள சக்தியை, நிதர்சனமாக எடுத்துக் காட்டுவதற்காகத்தான், நாட்டில் நம் காலத்திலேயே நடந்த உண்மையை, உங்கள் கவனத்திற்கு வைத்தேன். இதன் மூலம் விளைந்த நன்மை தீமைகளை விமர்சனம்செய்ய வேண்டுமென்பது என் நோக்கமுமில்லை, அது தேவையு மில்லை.

அடுத்து, அண்மையில் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் பெரும்புரட்சி, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றிய அதிசய நிகழ்ச்சியாகும்.

இதற்கும் அடிப்படைக் காரணம், வலிமைமிக்க பிரச்சார சாதனமாகிய, நாடகத்தின் மறுபதிப்பாக விளங் கும் சினிமாவே என்ற உண்மையை, நாம் மறந்துவிடுவதற் கில்லை.