பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 237

ஆம்...நாடகத்திலோ, அல்லது திரைப்படத்திலோ காணும், உணர்ச்சிகரமான நிகழ்ச்சிகளில் தோன்றும் புரட்சிகரமான பாத்திரப்படைப்பிலும், பேசும் புரட்சிகரமான உரையாடல்களிலும், மக்கள் மயக்கமும் நம்பிக்கையும் வைத்துத் தங்களைத் தாங்களே இழந்துவிடும்-ஈடுபடுத்திக் கொள்ளும் இயல்பு இயற்கையாகவே இருப்பதை மறுப்பதற் கில்லை; இதன் பலன் என்ன என்பதை ஆராய்வதல்ல எனது நோக்கம். இத்தகைய வலிமைவாய்ந்த பிரச்சார சாதன மாகிய நாடகக்கலையின் சக்தியை-ஈடு இணையற்ற அதன் ஆற்றலை, அறிஞர் பெருமக்களாகிய உங்களின் சிந்தனைக் குக் காணிக்கையாக்க வேண்டுமென்பதற்காகத்தான் நினை வுறுத்தினேன்.

விளக்கு வீட்டில் இருளைப் போக்குவதற்கும் பயன்படும். வீட்டைக் கொளுத்துவதற்கும் பயன்படும்.

கத்தியை, பழத்தை நறுக்குவதற்கும் உபயோகிக்க லாம்; கழுத்தை அறுப்பதற்கும் உபயோகிக்கலாம். அது, அவைகளைக் கையாள்வோரின் பண்பைப் பொறுத்த செயலாகும். விளக்கு கையைச் சுட்டுவிடுமென்றோ, கத்தி காயப்படுத்தி விடுமென்றோ ஒதுக்குவது நல்லதல்ல.

ஆகவே, அறிஞர் பெருமக்களும் சமுதாயப் பெரியோர் களும் அரசியல் தலைவர்களும் நாட்டின் உயர்வுக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் பெரும் பயன்விளைவிக்கும் சக்திமிக்க நாடகக்கலையின் பெருமையை, வலிமையை, எளிதாக நினைத்து அலட்சியப் படுத்தவேண்டா மென்று கேட்டுக் கொள்ளுகிறேன். நமது அலட்சியத்தின் விளைவால் மேற் கண்ட விளக்கும், கத்தியும் யார்யார் கையிலோ சிக்கி நம் வீட்டுக்கும் நம் கழுத்துக்கும் கேடுசெய்யும் நிலை தோன்றி விடக் கூடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.