பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 241

நடிப்பதற்கென்று நாடக நிறுவனங்களே இல்லாத நிலையில் புதிய நாடகங்கள் எப்படித் தோன்ற முடியும்?

முற்றிலும் சிறுவர்களையே நடிகர்களாகக் கொண்டு நாடகங்களை நடத்தும் சகாப்தம், அநேகமாக 1950-ம் ஆண்டோடு தமிழகத்தில் அஸ்த்தமித்துவிட்டது என்றே. சொல்ல வேண்டும்.

திரைப் படங்களின் வளர்ச்சி, நாடகத்திற்கென்று இருந்த அரங்கங்கள் அனைத்தையும் கபளிகரம் செய்து விட்டது. இதன் காரணமாக, நாடக நிறுவனங்கள் அனைத் தும் நலிந்து-நசித்து நிறுத்தப் பெற்றுவிட்டன. குழந்தைப் பருவக்கிலிருந்தே பக்குவப்பட்ட தலைசிறந்த நடிப்புக் கலைஞர்களைத் தயாரித்த வழங்கும் பல்கலைக் கழகங்களாக விளங்கிய நாடக நிறுவனங்கள் அனைத்தும் அருகியபின் திரைப்படக் தறைக்கு நாடகத் துறையிலிருந்து கிடைத்து வந்த அனுபவ முதிர்ச்சி பெற்ற குணச்சித்ர நடிப்புக் கலைஞர்களின் வருகையும் தடைபட்டுவிட்டது.

இக்ககைய நெருக்கடியான சூழ்நிலையிலுங்கூட நாடகக் கலை வளர்ச்சிக்கென்றே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்ட நாடகக்கலை மேதை, முக்கமிழ்க் கலா விக்வாக்கினம் ஒளவை டி. கே. சண்முகம் அவர்கள் கமர் கைகளுக்கான இரண்டு அற்புகமான நாடகங்களைக் தயாரித்துக் கமிழகத்தி ற்கு வழங்கினார் ஒன்று அப்பாவின்

ای واب

ஆசை.” மற்றொன்று பலாப்பழம்' என்ற நாடகங்களாகும்.

இந்த இரண்டு நாடகங்களையும் எழுகி வழங்கியவர் திருச்சி, தினத்தந்தி நாளேட்டின் செய்தி ஆசிரியரும், எனது. அன்பிற்கரிய இளவலுமாகிய திருச்சி பாரதனாகும்.

இவ்விரண்டு நாடகங்களும் இயல் இசை நாடக மன்றத் தின் மானிய உதவி பெற்று அரங்கேறியதே அவற்றின் சிறப்புக்கு அத்தாட்சியாகும், ஒரு மணி நேரத்திற்குள் வானொலி ந்ாடகமாக அமைக்கப் பெற்ற நாடகங்களை சுமார் மூன்று மணி நேரம், மேடையில் சுவை குன்றாமல்,