பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கவிஞர் கு. சா. கி.

திறமையுடன் நடத்தி வெற்றி கண்ட கலைமேதை ஒளவை சண்முகம் அவர்களின் நாடக ஆக்கத் திறன், வியந்து போற்றுதற்குரியதாகும்.

தமிழகத்தின் மேடை நாடக வரலாற்றில் குழந்தை களுக்கான முழுநேர நாடகங்களாக முதன்முதலாக அரங் கேறிய பெருமை, அப்பாவின் ஆசை', 'பலாப்பழம்' ஆகிய இரு நாடகங்களுக்கே உரியதாகும்!

இந்த இரு நாடகங்களிலும், குழந்தை நட்சத்திரமாக திரு. ஒளவை சண்முகம் அவர்களிடம் பயிற்சி பெற்றவர் தான், இன்றைய கலை உலகின் இளவரசனாகத் திகழும் கமலஹாசன் என்பதை நினைக்கும்போது, திரு. சண்முகம் அவர்களின் பயிற்சியளிக்கும் திறமைக்கு, வேறு சான்றும் வேண்டுமோ?

குழந்தைகளுக்கான மறுமலர்ச்சி நாடகத் தொடக்கம், அதற்குப் பின் தொடர்வதற்கு வாய்ப்பின்றிப் போனதற்குக் காரணம், நாடக சபைகளே இல்லாமற் போனதுதான்.

தமிழகத்தில் குழந்தைகளுக்கான நாடகங்களை எழுதும் ஆற்றல் மிக்க எழுத்தாளர்கள் பலர் இருப்பதை நான் அறிவேன்.

பூவண்ணன், கூத்தபிரான், தம்பி சீனிவாசன், அழ. வள் எளியப்பா. தணிகை உலகநாதன், கி. மா. பக்தவத்சலன், ஆலந்துார் மோகனரங்கன், கார்த்திகேயன். எஸ். சாந்த லட்சுமி, இன்னும் எண்ணற்ற எழுத்தாளர்கள் இருந்தும், (Ք(ԼՔ நேர மேடை நாடகங்களை உருவாக்க, நாடக நிறுவனங்கள் இல்லாமற்போனது துர்பாக்யமேயாகும்.

வானொலியும், தொலைக் காட்சி நிலையமும் வழங்கும்சிறு கதைத் துணுக்குகளைப் போன்ற-பத்து, அல்லது பதினைந்து நிமிட நிகழ்ச்சிகளைக் கொண்டு திருப்தியடைய வேண்டியதுதான், தமிழகத்தின் தலைவிதியாகிவிட்டது!

ன்னசெய்வது? இதற்கு யாரை நோவது?