பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 243

'இளமையிற் கல்' என்பது ஒளவையின் அமுதவாக்கு. இந்நூற்றாண்டின் முற்பகுதியில் மிகப் பிரபலமாக நடை பெற்று வந்த பல்வேறு சிறுவர் நாடகக் குழுக்களில், அக் காலத்தில் ஐந்து முதல் பத்துப்பனிரண்டு வயதுச் சிறுவர்க ளாகச் சேர்ந்து, இளமை முதல் நடிப்புக்கலையில் பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்கள் தன் திரைப்படத்துறை தோன்றிய காலம் தொட்டு, இன்று வரை ஒளிவீசும் தாரகைகளாக விளங்கி வருகின்றனர்.

வி. ஏ. செல்லப்பா, டி. எஸ் சந்தானம், எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா, கே.பி. காமாட்சி, க.கே. பெருமாள், டி.கே. எஸ். சகோகரர்கள், சிவாஜி கணேசன், எம்.ஜி. ஆர் , கே.ஆர். ராமசாமி, காளி என். ரெத்தினம், என்.எஸ் கிருஷ்ணன், கே. சாரங்கபாணி, பி.டி. சம்பந்தம், டி. பாலசுப்ரமணியம், எம் ஜி. சக்ரபாணி, எம்.ஆர் ராதா, எம்.கே. ராதா, எம்.என். நம்பியார், கே. ஏ. தங்கவேலு, எஸ். எஸ். ராஜேந்திரன, வி. கே. ராமசாமி, டி.வி. நாராயணசாமி போன்ற இன்னும் எத்தனையோ ஈடு இணையற்ற நடிகர்களையும், டி.பி. ராஜலட்சுமி, கே.பி. சுந்தராம்பாள், எஸ். டி. சுப்புலட்சுமி, பி.எஸ். சிவபாக்கியம், டி.எம். சாரதாம்பாள் போன்ற எண்ணற்ற நடிகைகளையும் நடிப்புக்கலைப் பயிற்சிப் பள்ளிகளாகவும், குருகுலங்களாக வும் திகழ்ந்த சிறுவர் நாடக நிறுவனங்களன்றோ மேற்கண்ட நடிக மேதைகளைத் தமிழகத்திற்கு வழங்கிச் சிறப்பித்தன. இனி இத்தகைய வாய்ப்பு எங்ங்னம் கிடைக்கும்?

அனுபவ மெருகேறிய குணச்சித்திர நடிக மேதைகளை எதிர்காலக் கலைத் துறையில் காணமுடியுமா?

தென்னகத்திலுள்ள ஒரே ஒரு திரைப்பட நடிப்புக்கலைப் பள்ளியோ-அல்லது-பொழுது போக்குக் கலைக்குழுக்களாக உள்ள பயில்முறை நாடக நிறுவனங்களோ, இந்த இமாலயத் தேவையைப் பூர்த்தி செய்து விடமுடியுமா? இன்றுவரை திரைப்படத் துறையை வாழவைத்துக் கொண்டிருக்கும்