பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 247

கூப்பிய கரங்களுடன், இடையறாது சொறியும் கண்ணிருடன் மன்றாடுகின்றான். இந்திரன் அகலிகைக்குச் செய்த கொடுமையை நினைவூட்டி, அதற்காக எந்த தண்டனை விதித்தாலும் ஏற்றுக்கொள்வதாக சொல்லிக் கெஞ்சிக் கும்பிட்டு, அவளிடம் தற்கொலை செய்துகொள்வதில்லை என்ற உறுதியைப் பெற்றுக்கொண்டு. எப்படியோ நடைப் பிணம் போல் அங்கிருந்து மெள்ள நழுவுகிறான். ஆனால் அவளும் ஒரு நிபந்தனையோடுதான் உறுதிமொழி தருகின் றாள். அதாவது என்றாவது ஒருநாள் தன் கணவனைச் சந் திக்க நேர்ந்தால், அவர் என்னை மன்னித்து ஏற்றுக் கொண் டால'உயிர் வாழ்வேன். இல்லையேல் தற்கொலைதான் என்ற நிபந்தனைதான் அது. கெடுத்த வாலிபனும் கெடுக்கப்பட்ட அபலைப் பெண்ணும் யார் தெரியுமா? குழந்தைப் பருவத்தில் மணம் புரிந்து கொண்ட தம்பதிகள். சட்டப்படி கணவனும் மனைவியுமாகிய அவர்கள் அந்த உண்மையை அறியாமல், மனம் இடிந்து குமைகின்றனர். அந்தப் பெண்ணைக்கணவன் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடாகிறது. ஆனால் களங்கமடைந்த தன்னைக் கணவனுக்கு அர்ப்.ணம் செய்துகொள்ள விரும் பாத அவ்வுத்தமி, ஒரு பாழுங்கிணற்றில்விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயலும்போது, அவளின் சிறிய தந்தை யினாலேயே காப்பாற்றப்பட்டுப் பினாங்குக்கு அழைத்துப் போகப் படுகிறாள். அங்கே அழகிய ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். வானாளெல்லாம் நிகழ்ந்துவிட்ட களங் கத்தை நினைத்தே கரைந்து ஓடாகத் தேய்ந்து உருமாறிப் போன அந்தத் தம்பதிகள், வயோதிகத்தின் முதிர்ச்சியிலே துப்பறியும் கோவிந்தனின் முயற்சியால் உண்மைய்ை அறிந்து ஒன்று சேருகின்றனர்.

இதற்கிடையில் கதையில் எத்துனையோ பின்னல்கள், மாறுபட்ட பாத்திரங்கள், வில்லனின் கொடுமைகள், பாங்குக் கொள்ளை, இத்யாதி சம்பவங்கள் பல

இதைப்போலவே அக்காலத்தில் தெய்வத்தின் பிரதிநிதி களாகக் கருதப்பட்ட மடாதிபதிகளின், அந்தரங்க காமலீலை.