பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 கவிஞர் கு. சா. கி.

களையும் அநீதிகளையும் அப்பட்டமாகச் சித்தரித்துக்காட்டிய மற்றொரு புரட்சிப் படைப்புத்தான் சந்திரகாந்தா என்னும்

நாடகம்.

இத்தகைய புரட்சிக் கருத்துக்கள் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நாடக உருக்கொடுத்து, அருமையான வசனங்களை அமைத்து, உயர்தரமான பயிற்சியும் உணர்ச்சி மிக்க நடிப்பும் நிறைந்த எத்தனையோ நாடகங்களை, சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கு வழங்கிய பெருமை, மறுமலர்ச்சி நாடகத்தந்தை திரு. கந்தசாமி முதலியாருக்கே உரிமையாகும்.

பழமையும் புதுமையும்

'பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல, கால வகையினானே'

என்ற சூத்திரத்தின்படி-காலப்போக்கிலே பல புதுமைகள் முகிழ்ப்பதும், சில பழமைகள் மறைவதும் இயற்கையே என்றாலும், பழமைகள் அனைத்துமே தள்ளத் தக்கவை யென்றோ, புதுமைகள் அனைத்துமே கொள்ளத் தக்கவை என்றோ முடிவுகட்டிக் கொள்வது நல்லதல்ல.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்பும் பிறகும், இங்கு நடைபெற்ற புராண நாடகங்களில் உள்ள மிக உயர்ந்த கருத்துக்களையெல்லாம் எளிதில் ஒதுக்கி விடுதல் புத்திசாலித்தனமென்றும் கூறமுடியாது.

இராமாயணம் போன்ற ஒரு சிறந்த காவியத்தைஅதன் பாத்திரப்படைப்பின் சிறப்பை-மனித தர்மத்தை விளக்கும் குணச்சிறப்புக்களுக்கு ஈடான இன்னொன்றை எளிதில் யாரும் படைத்துவிட முடியாது; இதுவரை யாரும் படைக்கவுமில்லை.