பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 கவிஞர் கு. சா. கி

நான் எழுதிய அந்தமான் கைதி, மற்றும் என் தங்கை, பாசமலர், தைபிறந்தால் வழிபிறக்கும் போன்ற பல கதை களைச் சொல்லலாம்.

மற்றும் உலகமே கண்டு வியப்புறும் வண்ணம், பாரதப் பெருநாட்டின் விடுதலைக்கும் அதை ஒட்டியே உலகின் ஏனைய பகுதிகளின் காலனி ஆதிக்கங்களையெல்லாம் ஒழித்து சுதந்திரச் சுடரொளி பரவுவதற்கும் காரண கர்த்தராய் விளங்கிய மகாத்மா காந்தியடிகள், சத்தியம், அகிம்சை, சத்யாக்ரகம் ஆகிய லட்சியங்களில் உறுதிகொள்வதற்குக் காரணமாய் அமைந்ததே, அவர் இளம் பருவத்தில் பார்த்த ஹரிச்சந்திரா என்னும் நாடகம்தான் என்று காந்தியடிகளே தமது சுயசரிதையில் கூறியுள்ளார் என்றால், நாடகத்தால் விளையும் நற்பயன்களுக்குச் சான்று இதனிலும் வேறு வேண்டுமோ?

நாடகமும் திரைப்படமும்

திரைப்படங்களின் வருகையால் வளர்ச்சியால் நாடகக் கலை நலிந்துவிட்டது என்ற கருத்து, நீண்ட நெடுங்கால மாக நமது நாட்டில் நிலவி வருவதை நாம் அறிவோம். இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதில் ஐயமில்லை. ஆனால் தி ரைக் கலை தரத்திலும் திறத்திலும் உயர்ந்திருக்கிறதா? ஏதோ ஒரு இனம் புரியாத கவர்ச்சியா லும் பகட்டினாலும் மக்களை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தி நாடகக் கலையை விட திரைப்படக் கலை உயர்ந்ததுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல போலி!

மெளனப்படக் காலத்திலிருந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டுகாலமாகத் திரைப்படத்துறையின் வளர்ச்சியை நுணுகி ஆராய்ந்தால், நாடகக்கலையின் உயர்ந்த சிறப்பை மிஞ்சும் அளவுக்குத் திரைக்கலை இன்னும் வளர்ச்சி பெற்று விடவில்லையென்ற கசப்பான உண்மையை, யாரும் மறுக்க முடியாது.