பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாடக வரலாறு 251

கதைகள், காட்சி அமைப்பு முறைகள், எழுத்தாளர்கள் பயிற்சியாளர்கள் அனுபவ முதிர்ச்சியும் நடிப்புத்திறமும் மிக்க நடிக நடிகையர்களின் வருகையால் கிடைத்த பயன். ஆகிய இத்தகைய பெரும் சிறப்புக்குரிய நாடகக்கலையின் வளர்ச்சிமிக்க திறங்கள் பல, இன்றுவரை திரைக்கலைக்குப் பயன்பட்டு வருகின்றதே தவிர, நாடகக்கலை வளர்ச்சிக்குத் திரைக்கலை ஒரு சிறிதும் பயன் பட்டதில்லையென்பது வெள்ளிடை மலை.

நாடகக்கலையின் உயர்வான அம்சங்களையெல்லாம் தனது வளர்ச்சிக்குக் கபளிகரம் செய்து கொண்டது மட்டு மின்றி, தனது மலிவான-மட்டரகமான கீழ்த்தரக் கவர்ச்சி களின் மூலம், பூதாகாரமான வளர்ச்சியைக் கண்டிருக்கும் திரைப்படத்துறை, பெருநகரங்கள் முதல் சிற்றுார்கள் வரை யுள்ள அனைத்துக்கலையரங்கங்களையும் தானே ஆக்ரமித்துக் கொண்டதன் மூலம், ஆற்றலும் உயிர்த்துடிப்பும் நிறைந்த உயர்ந்த நாடகக்கலைக்கு எங்கெங்கும் அரங்கங்கள் கிடைக் காத அவலநிலை ஒரு பக்கமும், நாடகக்கலை வல்லுநர்கள் நடிகர்கள் அனைவரும் திரைக்கலைத் துறையையே நிரந்தர மாகக் கொண்டு பிறந்த இடத்தை மறந்துவிட்ட காரணத் தாலும், இன்று நாடகக்கலை நலிவுற்றுப் பொலிவற்று நிற்கின்றது.

திரைப்படத்துறை தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை அதன் வெற்றிக்குக் காரணமாய்த் திகழ்ந்த நடிக நட்சத்திரங்களின் பட்டியலைத் தொகுத்துப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.

திருமதிகள் டி.பி. ராஜலட்சுமி, கே.பி. சுந்தராம்பாள்,

எம். ஆர். சந்தானலட்சுமி, எம். எஸ். விஜயாள், எஸ். டி. சுப்புலட்சுமி, பி.எஸ். ரத்னாபாய், சரஸ்வதிபாய், பி. எஸ். சிவபாக்கியம், எம். எம். ராதாபாய்,

எஸ்.ஆர். ஜானகி, கே. டி. ருக்குமணி, குமாரி ருக்குமணி, பி. கண்ணாம்பாள், (காஞ்சனமாலா, பி. பானுமதி, பூரீரஞ்சனி, அஞ்சலிதேவி, அசுவத்தம்மா, எம்.எஸ்.எஸ். பாக்கியம், மனோரமா, அங்கமுத்து, பி. ஆர். மங்களம்