பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 கவிஞர் கு. சா. கி

போட்டுத்தந்த அடித்தளத்தின் பலத்தில் நிற்பதைத்தான் காணுகின்றோம். ஆனால், இந்த வாய்ப்பும் வாழ்வும் இன்னும் எத்தனை காலத்துக்கு நிலைத்து நிற்கும்?

தன்னிகரற்ற இசைக் கலைஞர்களாக விளங்கிய மிகச் சிறந்த புகழ் வாய்ந்த எம்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம் பாள், எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யூ. சின்னப்பா வைப் போன்றோ ஒரு மக்கள் திலகம் எம். ஜி. ஆரைப் போன்றோ, ஒரு நடிகர் திலகம் சிவாஜிகணேசனைப் போன்றோ, மக்கள் மனத்தில் நிரந்தரமான இடத்தைப் பெறும் தகுதிபெற்ற கலைஞர்களை நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிவிட முடியுமா? டி.எஸ். பாலையா, எம்.ஆர்.ராதா, எம்.கே. ராதா, எஸ்.வி. சுப்பையா, எம்.என். நம்பியார், டி.கே.எஸ். சகோதரர்கள் மற்றும் எத்தனையோ குணசித்ர நடிகர்களை நாடகக் கலைதான் வழங்கியது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், கே. சாரங்கபாணி, காளி என். ரெத்தினம், கே. தங்கவேலு, சந்திரபாபு போன்ற எண்ணற்ற மாமேதைகளை-நகைச்சுவைநடிகர்களை வழங்கியது நாடகக் கலைதான். மற்றும், நாடகாசிரியர்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், நடன ஆசிரியர்கள், கவிஞர்கள் என்று பல்வேறு வகைக் கலை நுணுக்க வல்லுநர்களை உருவாக்கிக் கொடுக்கும் தொழிற் கூடமாகத் திகழ்ந்துவந்த கலைக் கூடங்கள் அனைத்தும், பொய்யாய்க் கனவாய் மறைந்து விட்டதை நாம் நம் தலைமுறையிலேயே கண்டு விட்டோம்.

நாடகக் கலையின் மறுபதிப்பாக, மக்களின் மனத்தை எளிதில் கவரும் சாதனமாக, பொழுது போக்கும் கருவியாக ஏற்றமிகு கருத்துக்களைப் பரப்பி, எழுச்சி மிகு சமுதா யத்தை உருவாக்கத்தக்க காலக் கண்ணாடியாக விளங்கும் திரைப்படத் துறையைப் புதிய கண்ணோட்டத்தில், புரட்சிக் கருத்துக்களை மக்களின் உள்ளங்களிலே விதைத்து வளர்க்கும் பொறுப்பை, எதிர்காலத்திலாவது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாடகக்கலை புனர்வாழ்வு பெற்றால்தான் திரைக்கலைக்குக் கலைஞர்களை உருவாக்க முடியும்.