பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தமான் கைதிக்கு அறிஞர் புகழ்மாலை

சமுதாயத்தில் நிகழும் கொலை நிகழ்ச்சிகளுக்குச் சாம்சியங் களின் நிரூபணங்களைக்கொண்டே தீர்ப்பு வழங்குவது ஞாயமா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இந்நாடகம்!

கோவை மாவட்ட நீதிபதி C. S. செளத்திரி அவர்கள் சமூகக் கண்விழிப்பிற்குத் தூண்டுகோலாகிய நடை சித்திரம் இந்நாடகம்! -எப். ஜி. நடேசய்யர் அவர்கள் சமுதாயக் குறைபாடுகளை அழகாகவும், நிதானமாகவும் எழுதியிருக்கிறீர்கள். நாடகத்தைப் படிக்கும்போதே-மேடையில் நடிப்பதைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தூண்டுகிறது!

-அறிஞர். வெ. சாமிநாத சர்மா அவர்கள் கலைக்காகவே கலை, என்பது வீண் பேச்சு. இருட்டில் விளக்கை ஏந்துவது இருளை நீக்கத்தானே. 'அந்தமான் கைதி" கலையழகுள்ள ஒரு அருமையான பிரசார நாடகம்.

-பாவேந்தர் அவர்கள் நாடக லட்சணங்கள் அனைத்தும் அமையப் பெற்றது அந்தமான் கைதி" -அறிஞர். வ. ரா அவர்கள் அன்பர் கு. சா. கி. அவர்களின் அந்தமான் கைதி உள்ளத் தைத் தொட்டீர்த்த ஏடுகளில் ஒன்றாகும்.

-அறிஞர். அண்ணா அவர்கள் அந்தமான் கைதி' நாடகத்தை மிகவும் மெச்சத் தக்க வகையில் எழுதியுள்ள பூரீ கு. சா. கி. அவர்களை என் மனமார வாழ்த்துகின்றேன். நாமக்கல் கவிஞர் நாடகப் பேராசிரியர் திரு சம்பந்த முதலியார் அவர்களுக்குப் பிறகு நானறிந்த வரையில் அப்படியே மேடையேற்றத்தக்க ஒரு சிறந்த நாடகத்தை வெளியிட்ட பெருமை கு. சா. கி. அவர்கட்கே உரியது. - -ஒளவை டி. கே. சண்முகம் அவர்கள் இந் நாடகம் நல்ல விறு விறுப்பான நடையில் முதலிலிருந்து கடைசிவரை மனதைக் கவர்ந்த வண்ணம் செல்கிறது.

வித்வான். திரு. சிதம்பரநாதச் செட்டியார் நாடகாசிரியனின் நற்கலைப் புலமைப் பீடு பெற்றுள்ளது பேசவும் வேண்டுமோ? காலம் போற்றும் கதையிது போலச் சால் வேண்டும் தமிழகத்திற்கே! -கவி. ஆறுமுகனார் அவர்கள்