பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

சொற்பொழிவு நிகழ்ந்த மூன்று நாட்களிலும் அன்றைய தமிழ்த் துறை தலைவராக இருந்த டாக்டர் சி. பாலசுப்பிர மணியம் அவர்களே தலைமை தாங்கி சிறப்பித்ததோடு, அரியதொரு தலைமை உரையும் சிறப்புரையும் வழங்கி பெருமை சேர்த்தார்.

மேற்கண்ட எனது சொற்பொழிவிற்கு தொடர்ந்து வருகை தந்து பெருமை சேர்த்த அறிஞர் பெருமக்கள், பேராசிரியர்கள், புலவர்கள், மாணவ-மாணவியர்கள். எழுத் தாளர்கள் நடிக-நடிகையர்கள் ஆகிய அத்துணைப் பேர் களுக்கும், உடல்நிலை நலிவு காரணமாக இந் நிகழ்ச்சிக்கு வர இயலாதமைக்கு வருத்தம் தெரிவித்தும் தம் இளமைக் கால நிகழ்ச்சிகளை எல்லாம் நினைவு கூர்ந்து பரிவையும், பாசத்தையும் கடிதத்தில் வடித்து விடுத்த எனது உடன் பிறவா தமையன் நடிக மேதை திரு. எம். கே. இராதா அண்ணன் அவர்களுக்கும் எனது தலை தாழ்ந்த வணக்கம் உரியதாகும்,

மற்றும் இந்நூலுக்கு சிறப்புரை வழங்கியுள்ள அறிஞர் அமரர் நீதிபதி எஸ். மகராஜன் அவர்களும் முன்னுரை வழங்கியுள்ள டாக்டர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர் களும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் டாக்டர் சிலம்பொலி திரு. சு. செல்லப்பன் அவர்களும் கருத்துரை வழங்கி சிறப்பித்துள்ள தேசபக்தர் (செக்கிழுத்த செம்மல்கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் அவர்களின் திருக்குமாரன்) திரு. வ. உ. சி. சுப்பிரமணியம் அவர்களும் இந்நூலுக்கு அளித்துள்ள சிறப்புரைகளில் நானே வியந்து நாணும் அளவிற்கு என்னை மிக மிகச் சிறப்பாக உயர்த்தி

பெருமைப் படுத்தி உள்ளார்கள்.