பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இத்தகைய சிறப்புகள் எனக்கு இல்லாவிட்டாலும் அதற். குரிய தகுதியை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு இந்த அறிஞர்களின் நல் உரைகள் எனக்கு உற்சாகம் அளிக்கு மென்று நம்புகின்றேன்.

"தமிழ்நாடக வரலாறு' பற்றி இதுவரை வெளிவந்துள்ள நூல்களில் இல்லாத பல புதிய தகவல்களை இந்நூலில் திரட்டி கொடுத்துள்ளேன். நாடகத்துறை ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் இந்நூல் பயன்படுமானால் நான்மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

முந்திய முதற்பதிப்பைவிட இந்த இரண்டாவது பதிப்பில் சுமார் அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நாடக மேடை களில் முழங்கிவந்த எழுச்சிமிகு தேச பக்தி' பாடல் பல வற்றை புதிதாகச் சேர்த்துள்ளேன். அதைவிட சிறப்பான அம்சம் என்னவென்றால் தேசபக்தர், விடுதலை வீரர் எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்கள் வேலவன் வேடத் தோடு மயில் மீது அமர்ந்து நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மரணமடைந்த நிகழ்ச்சியை அன்னாரின் மறைவு குறித்து இரங்கற்பாவாக வடித்து அதற்கென்றே நடத்தப்பெற்ற ஒரு மாபெரும்பொதுக் கூட்டத்தில் பாடி வழங்கிய பாடல்களையும், பின்னொரு சமயத்தில் விடுதலைக் களத்தில் வன்முறை கட்டுமீறி தலை யெடுத்தபோது மகாத்மா காந்தியடிகள் 21 நாள் உண்ணா நோன்பு மேற்கொண்டதற்கு வருந்தி உலகமே காந்தியடிகள் உயிர் பிழைக்க வேண்டுமென்பதற்காக பிரார்த்தனை கூம் டங்கள் நடத்தியபோது புதுக்கோட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நான் படித்து வழங்கிய பிரார்த்தனைப் பாடல் ஒன்றையும் இந்தப் பதிப்பில் இணைத். துள்ளேன். .