பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் வள்ளுவரைப் போன்றும் புகழ்கபி ஏசு போன்றும் " எத்தனை இடர் வங்தாலும் இன்பமாய் ஏற்றுத் துாய சத்திய சோதனைக்குத் தன்னையே அர்ப்பணித்த உத்தமர் மகாத்மா காங்தி’க் குயிர்ப்பிச்சை அளிப்பாயம்மா!

நீதியே உருவாய் வங்து, நீதியே பயின்று, அன்னை நீதியின் படியே வாழ்ந்து, நீதியே தொழிலாய்க்கொண்டு நீதிக்கே உழைத்து, நீளும் அதிேய்ை எதிர்த்து என்றும் நீதிக்கே தவம் செய் காங்தி நீடுயிர் காப்பாயம்மா!

மத மெனும் கொடுமை நீங்கி மாங்தர்கள் ஒன்றுபட்டு சுதந்திர மடைந்து நாடு சுகப்பட அகிம்சைப் போரை உதவிய, உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற எங்கள் இதய சர் குருவாம் காங்தி இன்னுயிர் காவாயம்மா!

தன்னலம் எண்ணிடாது தர்மமே பெரிதாமென்று பன்னருங் துன்ப மேற்றுப் பாரத விடுதலைக்கே பன் முறை சிறை புகுந்து பாரினுக் குழைத்த காந்தி இன்னுயிர் தன்னைக் காத்து, எமக்குயிர் அளிப்பாயம்மா!