பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கவிஞர் கு. சா. கி.

தொன்மையும், வன்மையும், எளிமையும், இனிமையும் நிறைந்த தமிழ்மொழிக்கு-எழுத்து, சொல், பொருள் ஆகிய வற்றிற்கு இலக்கணம் கண்டதுடன் அமையாமல், எதுகை, மோனை, தளை, அடி, தொடை, எதுகை, இடைஎதுகை, கடை எதுகை போன்ற யாப்புமுறைகள் அமைத்த சிறப்புடன்,

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று, மொழியை மூவேறு வகையாகப் பிரித்து, அவை ஒவ்வொன் றுக்கும் உரிய இலக்கண வேறுபாடுகளையும் வரையறுத் துள்ள பெருமை பழமையானவை. ஆயினும், இன்றும் புதுமையிலும் புதுமையாகத் திகழும் சிறப்பைக் காணு கின்றோம்.

இத்தகைய பெரும்பேறு, உலகில் இன்றுவரை வேறு எந்த மொழிக்கும் வாய்த்ததில்லை என்பதை நினைக்கும் போது,

'பெருமை கொள்வாய் தமிழா-தமிழ்நாட்டில்

பிறந்ததனால் மிகச்சிறந்தவன்- கானென்று பெருமை கொள்வாய் தமிழா...'

என்று, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய பாடலை இன்றும் பாடத் தோன்றுகிறது.

இமயம் பிறப்பதற்கு முன்பே தமிழன் பிறந்தான். ஆம். இலமூரியாக் கண்டம் கடற்கோள் கொண்ட பின்புதான் இமயம் எழுந்ததென்பது நிலநூல் வரலாறு. நினைவுக்கும் 'எட்டாத நெடுங்காலத்திற்கு முன் கடலால் கொள்ளப் பட்டவர்கள் பல கோடிப் பேராக இருக்கலாம். எஞ்சிய தமிழர்கள்தான் இமயம் முதற் குமரிவரையுள்ள இந்தியப் பெருநாடு எங்கணும் பரவி வாழ்ந்திருக்கின்றனர். அக்காலத் தமிழர்கள் கலை, நாகரிகம், பண்பாடு, மொழி, இலக்கியம், அரசியல், ஆட்சி முறை யாவும் மிக மேம்பாடுடையதாக