பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 61

இருந்திருக்கின்றது என்பதற்குச் சான்று கூறுகின்றது, அரப்பா, மொகஞ்சோதரா அகழ்வாராய்ச்சி.

இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த தமிழினத்தின் ஏனைய பல துறைகளைப் பற்றிய பெருமைகளை விளக்குவதற்கு எத்தனையோ அறிஞர் பெருமக்கள் உள்ளனர்.

நான் இங்குப் பேசுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் தமிழ் நாடகக்கலை பற்றியதாகும்.

இந்நாடகக்கலைபற்றி-இதற்குமுன் அறிஞர்பெருமக்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் மதுரைப்பல்கலைக் கழகத்திலும்,பலர் இந்தச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் மிகச் சிறப்பாக உரையாற்றியுள்ளனர் என்பதை அறிவேன்.

அப்பெருமக்கள் அனைவரிலும் மேலாகவோ நுணுக்க மாகவோ விளக்கமாகவோ இக்கலைபற்றி ஆய்வு பூர்வமாகப் பேசக்கூடும் என்ற நம்பிக்கை இல்லாவிடினும், ஏறத்தாழ அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, எனது இளம்பருவம் தொடங்கி இந்நாள் வரை, இளஞ்சிறார்களின் குழுவிலும் வயது வந்தோர்களின் குழுவிலும், ஸ்பெஷல் நாடகக் குழு விலும் பங்குபெற்று நடிகனாகவும், நாடகாசிரியனாகவும், பாடல் ஆசிரியனாகவும் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டு-சில புதிய தகவல்களை வழங்க முடியும் என்ற நம்பிக்கையுடன் எனது உரையைத் தொடங்குகின்றேன்.

தமிழகத்தில் நாடகம் தோன்றிய காலம்

ஒரு துறையில் தோன்றும் புதிய முயற்சிகள் செயல் வடிவம்பெற்று, பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு, சரியான உருவகம் பெறுவதற்குப் பல நூற்றாண்டுகள் கூட ஆகி விடக் கூடும். அதன்பிறகே அத்துறையில் இலக்கியங்கள் தோன்ற மு டியும்.