பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கவிஞர் கு. சா. கி.

இத்தகைய நடிப்புக் கலை மனிதன் தோன்றிய காலத் திலேயே தோன்றிப், படிப்படியாக வளர்ந்து, நாட்டியமாக வும்,கூத்தாகவும் நிலவி, இறுதியில் நாடகம் என்ற உருவகம் பெற்றுப் பல்லாயிரம் ஆண்டுகளாக எண்ணற்ற கோடி இதயங்களுக்கு எழுச்சியையும் மகிழ்ச்சியையும் வழங்கும் கலைக்கருவூலமாக, கற்பகத் தருவாக, கற்பனை ஊற்றாகப் பண்டுதொட்டு இன்றுவரை தொடர்ந்து வளர்ந்து வந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

நமது நாட்டில் மட்டுமின்றி, நாகரீக முதிர்ச்சியடைந்த உலகின் பல்வேறு நாடுகளிலும் அந்தந்தக் காலத்திற்கேற்ப இந்த அற்புதக்கலை தோற்றுவிக்கப் பெற்று வளர்ந்து வந் திருப்பதை, வரலாறு நமக்கு விளக்கிக் காட்டுவதைக் காணுகின்றோம்.

நாடகம், என்ற சொல்லுக்குள் நாடு-அகம் என்ற இரண்டு வார்த்தைகள், பொதிந்திருப்பதைக் காணலாம்.

இதன் பொருளை விரித்துக்கூறுவதானால்,ஒரு நாட்டின் நிலையைத் தனக்குள் பிரதிபலித்துக் காட்டுவதே நாடகம் என்று கூறலாம்.

பிறிதொரு வகையில் பகுத்துக் கூறுவதானால், நாடு+ அகம், அதாவது நாட்டின் இதயமே நாடகம் என்றும் கொள்ளலாம்.

மற்றும் ஒருவகையில் பார்த்தால், நாடு+அகம் அதாவது அகம்-நாடும், உள்ளம்...நாடும் கலை நாடகம்காண்போர் உள்ளத்தைக் கவர்ந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது நாடகம் என்ற பொருளும் இதனுள் பொதிந் திருப்பது விளங்கும்.

சொல்லுக்குச் சொல் இத்தகைய பொருள் பொதிந் திருக்கும் வார்த்தைகள் நிறைந்த மொழி உலகில் வேறு எந்த மொழியிலும் காணமுடியாத-தமிழ்மொழிக்கே உரிய