பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

தெள்ளத் தெளிந்த தமிழிலே எடுத்துக் கூறியும் பள்ளிக் கூடங்களில் சாதாரணமாக உருவாகாத ஒரு பெரும் புலமை தன்னிடம் இருக்கின்றது என்பதை இந்நூலாசிரியர் நிலை நாட்டி இருக்கிறார்.

19-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாடக நடிகர்கள் ஒழுக்க மற்றவர்களாக இருந்தார்கள் என்றும், சமுதாயம் அவர்களை வெறுத்து ஒதுக்கியது என்றும் பல இடங்களில் எடுத்துச் சொல்லி இருக்கிறார். இந்த நிலை நாடகக் கலைக்கு எல்லா நாடுகளிலுமே இருந்து வந்திருக்கிறது. கி. பி. 1572-ல் ஆங்கிலப் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் போட் டார்கள். நாடகத்தில் பங்கெடுக்கும் நடிகர்களைக் குட்டை வில் அடைத்து, சிறையிலிட்டு, சவுக்கால் அடித்துத் தண்டிக் கலாமென்று அந்தச் சட்டத்தில் கண்டிருந்தது. கீழ்த்தரமான மனித உணர்ச்சிகளை நாடகங்களில் சித்தரித்தால், அவற்றை சட்டப் பூர்வமாக தடுக்க முயன்றார்கள். ப்ரான்ஸ் நாட்டி லும் ஏறக்குறைய இதே நிலைதான். நடிகர்கள் இறந்தால் பாதிரிமார்கள் அவர்களுக்கு கடைசி சடங்குகள் கூட செய்ய மறுத்தார்கள். 17-வது நூற்றாண்டில் மோலியர்' என்ற சிறந்த நாடக ஆசிரியர் இறந்த போது கிருஸ்தவ சமய சடங்குகளைக்கூட அவருக்குச் செய்ய மறுத்து விட்டார்கள்.

நாளா வட்டத்தில் நடிகர்களுடைய ஒழுக்க வளர்ச்சி யாலும் கட்டுப்பாட்டாலும் அவர்களுடைய அந்தஸ்து உயர்ந்து கொண்டே போயிற்று. இங்கிலாந்திலே பெரிய நடிகர்களுக்குச் ‘சர்’ பட்டம் கொடுத்துப் போற்றினார்கள். 20-வது நூற்றாண்டில் நமது தமிழ் நாட்டில் நடிகர்களுக்கு நாடகப் பள்ளிக்கூடங்களில் பயிற்சி அளித்து ஒழுக்கச் சீலர் களாக ஆக்குவதற்கு பெரு முயற்சி செய்தவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்மந்தனார். உடுமலை முத்துச்சாமி கவிராயர், ஏகை சிவசண்முகனார், கிருஷ்ண ஸ்வாமி பாவலர், கந்தசாமி முதலியார், சி. கன்னையா, ஜெகன்னாத ஐயர், டி. கே. எஸ். சகோதரர்கள், நவாப் ராஜமாணிக்கம்