பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 69

மற்றும் இயம் என்னும் சொல்லுக்கு, ஒலி அல்லது சப்தம் என்ற பொருளும் இருப்பதால், பொருளுடன் கூடிய பாடல்களை இசையுடன் பாடி ஆடும் கலைக்கு நாட்டியம் என்ற பெயரும் பொருந்தும் எனக் கொள்ளலாம்.

ஆகவே, நாட்டின் அகத்தைப் பிரதிபலித்துக்காட்டு வது நாடகம் என்பது போல், நாட்டின்-இயலைப் பிரதிபலித் துக்காட்டுவது, நாட்டியம் என்று கொள்வதில் தவறில்லை யல்லவா? -

குறுகிய அளவில் குறிப்பிட்ட ஒரு கருத்தைப் பிரதி பலித்துக் காட்டுவதே குறிக்கோளாக இருந்த நாட்டியக் கலை, இன்று பரந்த அளவில் சிறுகதை, பெருங்கதை, காவியம், புராணம் போன்று விரிவான கதையம்சங் களைக் கொண்டு பல்வேறு பாத்திரங்களை யேற்றுப் பெருங் குழுவாக நாட்டிய நாடகம் என்ற பெயருடன் பரவலாக நடைபெறும் அளவுக்கு, வளர்ச்சியும் கவர்ச்சியும் பெற்றிருப் பதைக் காணுகின்றோம்.

திரைப்படங்களின் வருகைக்குப் பிறகும்கூட, நாடகக் கலை நலிந்த அளவிற்கு-நாட்டியக்கலை நலியாமல் இருப் பதற்குக் காரணம், அக்கலையில் ஈடுபடும் கலைஞர்கள் அழகும் இளமையும், கவர்ச்சியும் உள்ள பெண்களாக இருப்பது ஒன்று மற்றொன்று. மேற்படி கலைக்குத் தேர்ந் தெடுக்கப்படும் கருப்பொருள்-பாடல்-அபிநயம் ஆகிய யாவும் பால் உணர்ச்சியைத் தூண்டுவனவாகவும், எளிதில் ஆண் களின் காம உணர்ச்சியைத் துண்டுவனவாகவும் இருப்பதே யாகும். இதைப் பின்பு விரிவாக உரைப்பேன்.

நாடகத்தின் முற்காலம்

அகத்தியம் முதல் சிலப்பதிகாரம் வரை உள்ள கால கட்டத்தை நாடகக்கலையின் முதற்காலமாகவும்,