பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கவிஞர் கு. சா. கி.

நொண்டி நாடகம், பள்ளு நாடகம், குறவஞ்சி நாடகம், பாவைக் கூத்து, தெருக்கூத்து முதலிய நாடகக் கலையின் கால க்ட்டத்தை இடைக்காலமாகவும்,

சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியம்; பரிதி மாற் கலைஞரின் மாணவிஜயம், கலாவதி, ரூபாவதி; கோபால கிருஷ்ண பாரதியாரின்-நந்தனார்; பம்மல் சம்பந்த முதலி யார், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் முதல் இன்றுவரை உள்ள மறு மலர்ச்சி நாடகக் கலையின் கால கட்டத்தைத் தற்கால மாகவும் இனம் பிரித்துக்கொண்டு, இக்கால கட்டங்களில் நிகழ்ந்த மேற்கண்ட நாடக அமைப்பு முறைகளையும் அவற்றால் விளைந்த பயன்களையும், அவ்வப்போது நிகழ்ந்த மாற்றங்களையும், அந்த மாறுதல்களுக்கான சூழ் நிலைகளையும், விளக்குவதே இந்தச் சொற்பொழிவின் கருப் பொருளாக அமையும்.

மேலை நாடுகளில் உள்ளதைப்போல், தமிழில் இலக் கியம், கலாச்சாரம், மொழி, அரசியல், சமயம், பொருளியல் போன்ற அனைத்துத் துறைகளையும் பற்றிய சரியான-தெளி வான வரலாற்று நூல்கள் கிடைக்கப் பெறாமையால், மற் றைய துறைகளில் உள்ள தெளிவில்லாத குழப்பநிலை நாடகத் துறையில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆயினும், பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு துறை களில் பல்வேறு அறிஞர்கள்-அருளாளர்கள் யாத்தளிக்கப் பெற்ற பிற துறைகளைப்பற்றிய தகவல்களை அனுமானமாக ஓரளவாவது அறிந்துகொள்ள முடிவதைப்போல், மிகநீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே எண்ணற்ற நாடக நூல்களும், நாடக இலக்கண நூல்களும் தமிழ் மொழியில் இருந்தன வென்று, அத்தகைய அரும்பெரும் செல்வங்களான நூற் றுக்கணக்கான நூல்கள், காலத்தாலும் கடற்கோள் களாலும், பிறநாட்டுப் படையெடுப்புக்களாலும், கரை யான், செல்லு, புழுப்பூச்சிகளாலும் அழிக்கப் பெற்றும்