பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 71

மற்றும், சூழ்ச்சி மனம்படைத்த பிற நாட்டினர், பிற மதத் தினர் பிறஇனத்தவர்களின் சதிச்செயல்களாலும், தூண்டுதல் களாலும், மக்கள் அறியாமையால் ஆற்றிலும் குளத்திலும் ஆழியிலும், கிணற்றிலும் வீசியெறிந்தும் நெருப்பிலிட்டுப் பொசுக்கியும் அழித்து ஒழித்திருக்கக் கூடும் என்றும் அறி கின்றோம். அப்படி அழிந்துபோன இலக்கில இலக்கண நூல்களின் பெயர்களையும், சிறப்பினையும் பார்க்கும்போது, அந்தோ தமிழறிந்த உள்ளமெல்லாம் குமுறும் என்பதில் ஐயமில்லை.

அங்ங்னம் அழிந்துபட்ட நாடக இலக்கண இலக்கியங் கள் சிலவற்றின் பெயர்களை நானறிந்தவரை உங்கள் நினை வுக்குக் கொண்டுவர முற்படுகிறேன்.

அவையாவன :

1. அகத்தியம் 2. பரதம் 3. குணநூல் 4. கூத்த நூல் 5. சந்தம் 6. சயந்தம் 7. செயன்முறை 8. செயிற்றியம் 9. நூல் 10. பரத சேனாபதியம் 11. மதிவாணர்நாடகத்தமிழ் நூல் 12. முறுவல் 13. கடகண்டு 14. பரிமளகா நாடகம் 15. காரைக்குறவஞ்சி 16. குருக்ஷேத்திர நாடகம் 17. சோமகேசரி நாடகம் 18. ஞானாலங்கார நாடகம் 19. திருநாடகம் 20. பூம்புலியூர் நாடகம் 21. வஞ்சிப் பாட்டு 22. மோதிரப்பாட்டு 23. ராஜராஜேஸ்வர நாடகம் 24. ராஜ ராஜ விஜயம் 25. சரபோஜி நாடகங்கள் 26. விளக் கத்தார்கூத்து 27. நொண்டி நாடகங்கள் 28. குறவஞ்சி நாடகங்கள் 29. பள்ளு நாடகங்கள் 30. புராண நாடகங்கள் 31. இதிகாச நாடகங்கள் மற்றும் எத்தனை எத்தனையோ. யாரால் அறுதியிட்டுக் கூறவியலும்!

தெய்வீகக் கலை

அண்டாண்ட கோடியெல்லாம் நின்று நிலைத்து ஒரு நியதிக்குள் சுழலுமாறு வானப்பெரு வெளியெங்கும் நீக்கமற