பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கவிஞர் கு. சா. கி.

நிறைந்து சதா சர்வ காலமும் இயங்கியும் இயக்கியும் வரும் பஞ்ச பூதங்களின் இயக்கங்களுக்கெல்லாம், நிலைக் களனாக விளங்கும் ஆகாயப் பெருவெளியையே சிற்சபை யாக்கி-ஆங்கே இடையறாது இயங்கும் பஞ்ச பூதங்களின் இயக்கத்தையே இறைவடிவமாக்கி, அந்த இறைவனே அம்பலக் கூத்தனென்றும், ஆடும் தெய்வமென்றும், நடரா ஜப்பெருமானென்றும் பெயர் சூட்டி, இடது காலைத் தூக்கி ஆடும் அழகிய வடிவமும் அமைத்துக் கொடுத்து, அவனது ஆட்டம் என்றும் தொடரும், இமைப்பொழுதும் நிற்காது, நின்றால்...அண்டங்கள் அனைத்துமே நிலைமாறிச்சிதறுண்டு அழியும் என்ற தத்துவங்களை யெல்லாம் மெய்ப்பித்து வளர்த்த மெய்ஞானியர்களின் மரபில் வந்தவர்கள் நாம்.

'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே'

என்ற மூதுரையின்படி, இறைவன் தானே இயங்குவதன்றி, பிரபஞ்சம் அனைத்தையும், உயிர்க்குலம் அனைத்தையும், சிறப்பாக ஆறறிவு படைத்த மனிதருள் அனைத்தையும் இயக்குகின்றான். ஆம்; அவன் சூத்திரதாரி. நாம் பாத்திரப் படைப்பு அவனுடைய முடிவில்லாத நாடக அரங்கில் இடை இடையே தோன்றி மறையும் உப பாத்திரங்கள் நாம். அவன்தான் முழுமுதல் நடிகன். முடிவில்லாக் கதாநாயகன்.

இறைவனையே ஆடற்கலையரசனாகவும் அவனுடன் இணைந்தாடும் அன்னைபராசக்தியை அரங்கநாயகியாகவும், நாராயணனை அரங்கநாயகனாகவும், நான்முகனை நாடகா சிரியனாகவும், நந்திதேவனை முழவுக்கலையின் முதல்வனா கவும், நாரத முனிவரையும் தும்புருவையும் வீணை இசைப் போராகவும், கருடர், கின்னரர். கந்தருவர்களை இசைக் கலைஞர்களாகவும், வாணி தேவியை வீணாபாணியாகவும், அரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை முதலிய கூத்துக்களை வளர்த்த தேவ மாதர்களையும் அறிமுகப் படுத்தும் இதிகாச, புராண, பெளராணிக மதவாதிகளும் கூட, சிறப்புமிக்க கவின் கலைகளின் பெருமையைப்