பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

முதலியோர் என்ற உண்மையை எடுத்துக் கூறி இருக்கிறார் இந்நூலாசிரியர், நடிப்புக் கலையைச் சொல்லிக் கொடுப் பதிலே தமிழ் நாடக ஆசிரியர்கள் எவ்வளவு திறமை பெற்றி ருந்தார்கள் என்பது பற்றி இந்நூலாசிரியர் மிகச் சிறப்பாக கூறியிருக்கிறார்.

சென்ற ஒரு நூற்றாண்டு காலமாகத்தான் தமிழ் நாடக மேடையில் பெண்கள் நடித்து வருகிறார்கள் என்றும், அதற்கு முன்பெல்லாம் ஆண்களே பெண் வேடம் தாங்கி மிகச் சிறப்பாக நடித்து வந்தார்கள் என்றும், பின்னால் பெண் களும் ஆண் வேடம் தாங்கி திறமையாக நடித்தார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படிக் குறிப்பிட்டு விட்டு சுமார் 30,55 ஆண்டுகளுக்கு முன்பு குடந்தையில் நடந்த ஒரு ரசமான நிகழ்ச்சி ஒன்றையும் கீழ்க்கண்டபடி விவரிக்கிறார்:

மற்றுமோர் அருமையான நிகழ்ச்சி. சுமார் 55 ஆண்டு களுக்கு முன்பு குடந்தையில் நடந்தது. கே.பி. சுந்தராம்பாள் வேலன், வேடன், விருத்தனாகவும் எஸ். ஜி. கிட்டப்பா பூரீ வள்ளியாகவும் நடித்தார்கள்! இவ்விருவருக்கும் உள்ள உறவும் ஊடலும் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பாடுவதும் பேசுவதும் ஒருவரை ஒருவர் சீண்டுவதும் ரசிகர்களை ஆனந்த சாகரத்தில் ஆழ்த்தி வினாடிக்கு வினாடி மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைக்கச் செய்தன. இத்தகைய அற்புத இனிய காட்சிகளையெல்லாம் இனி எங்கே காணப் - போகிறோம்!'

இந்த நாடகத்தை அந்தக் காலத்தில் அதே நாளில் நானும் பார்த்து ரசித்தேன், ஆசிரியரைப் போல எனக்கும் இந்த நிகழ்ச்சி பழைய நாடக நினைவு ஊற்றுக்களையெல் லாம் திறந்து வைக்கிறது!