பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 83

வனுக்கே உரிமையாக்கி, அதாவது மனைவியாக்கி, பொட்டுக் கட்டுதல் என்னும் ஒரு சடங்கை, நடத்தினர். இறைவ னுக்கும் அவர்கட்கும் திருமணம் செய்து வைத்து, ஆயுள் முழுவதும் அவள் தெய்வத் திருத்தொண்டுக்கே தாரை வார்த்துக் கொடுக்கப்படுவாள். நாளடைவில், இதற் கென்றே தாசிகுலம் என்று ஒரு ஜாதியையே உண்டாக்கி விட்ட கொடுமையையும் இத் தமிழகம் கண்டது. நாதசுரம், தவில், வித்வான்களும் இக்குலத்தினராகவே இருத்தலைத் காணுகின்றோம். இப்படியே இறைவன் ஆலயங்களில் இசைப்பாடல்களைப் பாடுவோரை ஒதுவார் ஜாதியென்றும் விழாக்காலங்களில் நாடகம் நடிப்போர்களைக் கூத்தாடி ஜாதியென்றும் ஏற்பாடு செய்திருப்பதை, தஞ்சை மாவட்டம் போன்ற இடங்களில், பல ஊர்களில் இன்றும் காணலாம்.

இறைவனின் திருச்சந்நிதிக்கு முன்பு ஆத்மார்த்த மாகத் தனது இதயத்தையே நிவேதனம் செய்யும் புனிதப் பணிக்கென்று தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அப் புனிதவதிகளை, அக்காலக் கோயிற் பூனைகளாகவும், பெருச் சாளிகளாகவும் இருந்த மடாதிபதிகள் முதல், அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், ஆள்பலமும் பணபலமும் உள்ள அந்தஸ்து மிக்க செல்வச் சீமான்கள் ஆகியோர் தங்களின் போகப் பொருளாகவும், ஆசைநாயகியர்களாகவும் ஆக்கிக் கொண்ட அநீதியை என்னவென்று சொல்வது? தெய்வத்திற்கு நிவேதனம் செய்த திவ்யப் பிரசாதத்தை தெருநாய்கள் பறித்துக்கொண்ட செயலுக்குத்தான் இதை ஒப்பிட முடியும்! சுகபோகச் செல்வங்களைச் சுலபமாக அடைவதற்கான வழியைக் கண்டு கொண்ட அந்தப் பேதைப் பெண்களும், இதையே வருவாய்க்குரிய ஒரு நிரந்தர வியாபாரத் தொழிலாகக் கொண்டு விட்டனர், பிற்காலத்தில்!

இறைவனின் திருச்சந்நிதானத்தின் முன்பு கூடி

யிருக்கும் மக்களுக்கு, தெய்வீகத் தத்துவத்தையும், பக்தி மார்க்கத்தையும், முத்திக்கு வழியையும் விளக்கிக் காட்டும