பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கவிஞர் கு. சா. கி.

கர்நாடக சங்கீதம் என்பது தமிழிசைக் கலையே

- கர்நாடக சங்கீதம் என்றால் பழமையான இசையென்று

தான் பொருள்.

தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் வழங்கிவரும் இந்தக் கர்நாடக சங்கீதத்திற்குப் பிறப்பிடமாகவும் அடிப்படையாகவும் இருந்தது தமிழிசையே என்பதற்கு, சங்க இலக்கியங்களி லுள்ள பல ஆதாரங்களை எடுத்துக் காட்டலாம்.

முப்புறமும் கடல் சூழ்ந்த நாடு என்னும் காரணத்தால், தமிழகத்திற்குக் கரைநாடு-திரைநாடு என்ற பெயர்களும் வழக்கில் இருப்பதாக அறிகின்றோம்.

இங்கு கையாளப் பெற்ற இசையைக் கரைநாட்டு இசை என்று கூறும் வழக்கமும் இருந்திருக்க வேண்டும்.

பிறகு காலப்போக்கில் திருச்சிராப்பள்ளி ம்ரிச்சி' யாகவும், தஞ்சாவூர் டேஞ்சூரா கவும், மதுரை 'மெஜு ரா' வாகவும் மருவியதைப் போல, கரைநாட்டு இசையென் பது கர்நாடக இசை-அல்லது கர்நாடக சங்கீதம் என்று மருவியிருக்கக் கூடுமென்று கருதுகின்றேன்.

சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளாரும்: அதன் உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லாருமே அதற்குச் சான்றாகத் திகழ்கின்றனர். இன்று கர்நாடக இசையில் கையாளப்பெறும் ச-ரி-க-ம-ப-த-நி என்ற ஏழு சுரங்களைப் பண்டைய..தமிழிசை வாணர்கள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இழி, விளரி, தாரம் என்ற பெயரில் வழங்கினர்.

சிலப்பதிகாரத்தில் வரும் ஆய்ச்சியர் குரவைப் பகுதியில் நிகழும் குரவைக் கூத்தில், ஏழு இளம் பெண்களை வரிசை யாக நிறுத்தி, அந்த எழுவருக்கும் மேற்சொன்ன ஏழு சுரங் களின் பெயர்களை சூட்டி, அவ்வேழு சுரங்களும் ஒலிக்கும் குரலைப் பண்பர்டுவதாகவும், அப்பண்ணில் வரும் சுரங்