பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் தமிழ் நாட்டில் எத்தனையோ ஆயிரம் ஆண்டு: களாக இந்தக் கலையை பரத நாட்டியத்தில் நுணுக்கமாக காட்டி வந்திருக்கிறார்கள். பார்க்கப் போனால், ஒவ்வொரு பரதமும் ஒரு நாடகமாய் இருக்கும். கி. பி. இரண்டாவது நூற்றாண்டில் எழுதப் பெற்ற சிலப்பதிகாரத்தில் கண்ட குறிப்புகளிலிருந்து தமிழ் நாட்டிலுள்ள நாடக அரங்குகளி லும் பல அற்புத உத்திகளை கையாண்டு இருக்கிறார்கள் என்று இந்நூலாசிரியர் கூறுகிறார். ஒருமுக எழினி’ எனும் ஒரு வகை திரை இருந்தது. அதாவது அரங்கில் ஒரு புறமிருந்து எதிர்ப்புறம் பாய்ந்து அரங்கை மறைக்கும் திரை. ப்ொருமுக எழினி’ என்று மற்றொரு வகை திரை இருந்தது. அதாவது இருபுறங்களிலுமிருந்தும் எதிர் எதிரேவந்து நடுவில் ஒன்று கூடும் திரை. மூன்றாவது கறந்து வரல் எழினி’ என்று ஒருவகை. இவைகள் இருக்கும் இடம் பார்ப் போருக்குத் தெரியாமல் தந்திரமாக மறைக்கப் பட்டிருக்கும். கீழிருந்தோ மேலிருந்தோ இத்திரை திடீரென்று அரங்கத்தை மறைத்துக் கொள்ளும். அரங்கத்தில் உள்ள தூண்களின் நிழல்கூட அரங்கத்தில் விழாமல் பார்த்துக் கொள்வார்களாம். "தூண் நிழல் புறப்பட' என்று இதை குறிப்பிடுகிறார் சிலப் பதிகார ஆசிரியர். மேடையிலே மாண் விளக்கு ஒன்று இருக்குமாம். அந்த விளக்கிலே துரண் நிழல் கூட தெரியா மல் மறைந்து விடுமாம். அரங்கின் விதானத்திலே ஒவியங்கள் தீட்டப்பட்டு இருக்குமாம். மேடையிலே வரிசை யாக முத்துச் சரங்கள் தொங்குமாம். இப்படி எல்லாம் வர்ணிக்கிறார் சிலப்பதிகாரத்திலே இளங்கோவடிகள். ' .

அபிநயத்தில் உலகப் புகழ் பெற்ற பாலசரஸ்வதியின் கலையில் இந்த உண்மைகளை எல்லாம் கண்டு மகிழலாம்.

சீன நாட்டிலும் நாடகக் கலை சுமார் 2500 ஆண்டு களுக்கு முன்பிருந்தே வளர்ந்து வந்திருக்கிறது. கி. பி. 8-வது நூற்றாண்டில் (Tang) மன்னர்கள் காலத்தில் நடிகர்களுக் கென்று ஒரு பள்ளிக்கூடம் நடத்தி அதில் 300 ஆடவர்களுக்கு