பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 89

மற்றும், தமிழகத்தில் தோன்றிய சமயக் குரவர்களாகிய அப்பர். சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர், ஆழ்வாராதிகள் ஆகிய மகான்கள் அனைவரும், இயற்புலவர் களாக மட்டுமின்றித் தங்கள் தங்களின் பனுவல்களைப் பண் ணோடு அமைத்து நாடுமுழுவதும் சுற்றித் தெய்வத் திருத் தலங்கள் தோறும் கூடும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இசைக் கலையோடு பக்திக்கலையையும் சேர்த்து வளர்த்து வந்தார்களென்றும் அறிகின்றோம்.

இங்ங்ணம் வழி வழி வளர்ந்துவந்த தமிழிசைக்கலை, வேற்றரசர்களின் ஆதிக்கம் வேரூன்றத் தேக்க நிலையும், திசைமாறும் போக்கும் நிகழ்ந்தன போலும்.

மன்னர் எவ்வழியோ அவ்வழியே மக்கள்’’ என்றவாறு, தமிழகத்தில் வேற்று இன அரசர்களின் ஆதிக்கங்கள் தோன்றிய காலங்களிலெல்லாம், அந்தந்த மன்னர்களின் இனத்தைச் சேர்ந்த மக்களின் குடியேற்றமும், அவரவர் களின் மொழி, கலை, கலாச்சாரங்களின் ஊடுருவல்களும் சிறுகச் சிறுகப் பெருகித் தமிழ் மொழி, கலை, கலாச்சாரங் களில் மாற்றங்களும் சிதைவுகளும் நேர்ந்திருக்கவேண்டும்.

அத்தகைய மன்னர்களும் மக்களும், மொழியால், இனத் தால் வேறுபட்டவர்களாயினும், சமணம் பெளத்தம் போன்ற வேற்று மதத்தவர்களாக அல்லாமல், தமிழர்களும் நாளடைவில் ஏற்றுக்கொண்டு விட்ட, இந்து அல்லது பக்தி மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த காரணத்தால், மத ஒருமைப்பாடு கருதிப் பிற இனத்தவர்களின் மொழி, கலை, கலாச்சாரங்களையும் கண்மூடித்தனமாகக் காலப் போக்கில் மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர் போலும்.

இது மேட்டுக் குடிகளைச் சேர்ந்த படித்த மக்களின் சுய நலம் கருதிய செயலாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால்,

த.நா.-6