பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கவிஞர் கு. சா. கி.

அடிமைத் தனத்தின் கொடுமையால் காலப் போக்கில் அநீதிகள் கூட நீதியாய்-நியதியாய் நிலைத்து விடுவதைப் போல், கலைத்துறையிலும் விதேசியங்களெல்லாம் சுதேசியம் போன்று நிலைத்துவிட்ட கொடுமையைக் காணுகின்றோம்.

கரிகால் வளவன், முதற்குலோத்துங்கன், ராஜராஜன் போன்ற சோழப் பேரரசர் காலங்களிலும், பல்லவர்களின் ஆட்சிக் காலத்திலும், வடமொழிப் புலவர்கள் மிகுந்த செல் வாக்கும் ஆதரவும் பெற்றுப் போஷிக்கப் பெற்றிருக் கின்றனர்.

அதன்பின், நாயக்க மன்னர்களின் காலத்தில் தெலுங்கு மொழியும், அம்மொழியைச் சார்ந்த புலவர்களும், செல் வாக்குப் பெறும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இங்ங்னம் தமிழகத்தில் வேரூன்றிவிட்ட வேற்றுமொழி யினரின் வம்சாவளியினரிற் பிற்காலத்தில் தோன்றியவர்கள் தான் சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப் பெறும் முத்துசுவாமி தீட்சதரும், சாமா சாஸ்திரிகளும், தியாக பிரம்மமும், மற்றும் பட்டணம் சுப்ரமண்ய ஐயர் போன்ற வர்களுமாவர்.

இவர்களில் முன்னவர்கள் இருவரும் வடமொழியில் பெரும் புலமை பெற்றவர்களாகவும், பின்னவர்கள் இருவரும் தெலுங்கு மொழியை வீட்டு மொழியாகக்

கொண்டவர்களுமாவார்கள்.

களங்கமற்ற தெய்வபக்தியுள்ளவர்களும் வடமொழியி லும், தெலுங்கு மொழியிலும், இசைத் துறையிலும் நிறைந்த புலமை பெற்றவர்களுமாகிய இவர்கள், நூற்றுக்

கணக்கான பாடல்களைப் புனைந்தனர்.

இசைநயமும் பக்திச் சுவையும் மிகுந்த இவர்களின் பாடல்கள் வெகுவாகத் தமிழகம் எங்கும் பரவத் தொடங்கின.