பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 91

தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, இசைக்கலையில் தேர்ந்து, பாடல்கள் புனைந்த இவர்களின் பனுவல்கள், பண்டைய தமிழ் இசையின் மரபினை அடிப்படையாகக் கொண்டே, சிற்சில மாற்றங்களோடு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அமைப்பைக் கொண்ட கீர்த்தனைகள் என்ற பெயருடன் விளங்கின. பொதுவாக இம்முறைப் பாடல் களுக்கு கர்நாடக சங்கீதம் என்ற பெயரும் வழக்கத்திற்கு வந்தது.

பண்டைத் தமிழிசைக் கலையை அடித்தளமாகக் கொண்டு, கர்நாடக சங்கீதம் என்ற மாற்று அமைப்பு முறையை முதன்முதலில் ஏற்படுத்திக் கையாளத் தொடங்கி யவர் புரந்தரதாசரே யாகும். இவர் காலம் 18-ம் நூற்றாண்டு என அறிகின்றோம்.

இசைக்கலையை எளிதில் பயில்வதற்கு ஏற்ற முறையில், சரளிவரிசை, ஜண்டவரிசை, கீதம், அலங்காரம், வர்ணங் கள் போன்ற ஸ்வர அமைப்புகளும் ஸ்வர சாகித்தியங்களும் மிகவும் அற்புதமான முறையில் இவர் அமைத்துக் கொடுத்தார்.

கர்நாடக சங்கீதத்திற்கு மன்னர்கள் கொடுத்த ஆதர வும், அதன்பால் மேட்டுக் குடியினர் கொண்ட ஈடுபாடும் பெருகப் பெருகத் தமிழர்களுக்கே உரிய பண்கள், திறம், திறத்திறம், உருக்கள் ஆகிய தமிழிசைக் கலைமுறைகள் படிப்படியாக அருகலாயின.

இது எனது கருத்துமட்டுமன்று. மகாவித்துவான் திரு. உ. வெ. சாமிநாத ஐயர் அவர்களே தாம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியாரின் வரலாற்று நூலின் முன்னுரையில், இக்கருத்தைக் கூறியிருக்கின்றார்கள்.

நாடகத் துறையையே விளம்பரச் சாதனமாகக் கொண்டு மிகக்குறுகிய காலத்திலேயே தங்கள் இயக்கத்தை வளர்த்து, ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தினர் குறிப்பாக, இசை மரபில்