பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கவிஞர் கு. சா. கி.

தோன்றிய கலைஞர் மு. கருணாநிதி போன்றவர்கள் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், இத் துறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற் கொள்வதற்கான முயற்சிகளில் சிரத்தை காட்டாது போனது, தமிழகத்தின் துர்ப்பாக்கியமென்றே கூற வேண்டும்.

மிக நீண்ட நெடுங்காலம் பல்வேறு இனத்தவர்-மொழி யினரின் ஆதிக்க ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டதன் காரண மாக உருக்குலைந்து போன மொழி, கலை, இலக்கியப் பண் பாடுகள் அனைத்தும், நாம் சுதந்திரம் பெற்ற பிறகாவது செம்மைப் படுத்துவதற்கான வழி வகைகள் காணுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய முயற்சிகள் அரும்பெடுக்கவும் காணோம். மத்திய மாநில இரட்டையாட்சி முறை இதற்குத் தடை யாக இருப்பினும், அத் தடைகளையும் தகர்க்கும் திறன் இத்தகைய பல்கலைக் கழகங்களுக்கு உண்டு. எனவே, இத் துறைகளின் வளர்ச்சியில் பல்கலைக் கழகங்கள் பொறுப் பேற்கவேண்டும் என்பது எனது ஆசை, வேண்டுகோள். கதாகாலrேயங்களும் நாடக்கலையில் ஒரு கூறுதான

மரப்பாவை, துணிப்பாவை. தோற்பாவைக் கூத்துக்கள்; தெருக்கூத்து, நாட்டியம், படிக்கும் நாடகம் ஆகிய இவை யாவும் நடிக்கும் நாடகத்தின் பல்வேறு கோணங்களே என்று கொள்வதைப்போல, தம்பூரா ஸ்ருதி, ஆர்மோனி யம், பிடில், மிருதங்கம், பின்பாட்டு ஆகிய பக்கவாத்தியக் குழுவினர் பின்னே இருந்து இசைக்க, முன்னே பீதாம்பர தாரியாய், சர்வாலங்கார பூவிதராய்க் கையில் சப்ளாக் கட்டையை இசைக்கேற்பத் தாளம் தட்டிக்கொண்டு, பாடி யும் ஆடியும், நவரச பாவ பேதங்களுக்கேற்பவும், கதையில் வரும் பாத்திரங்களுக்கேற்பவும் பேசியும், நடித்துக் காட்டி யும். கதையை நடத்திக் காட்டும் கதாகாலட்சேப நிகழ்ச்சி களையும் நாடகத்தின் ஒரு கூறாகவே நான் கருதுகிறேன்.