பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 93

நான் மிகச் சிறுவயதிலேயே மாங்குடி சிதம்பர பாகவதர், சூலமங்கலம் வைத்தியநாதபாகவதர், ஹரிகேச நல்அார் முத்தையாப் பாகவதர், தஞ்சாவூர் சாரநாயகி அம்மாள், பண்ணிபாய், காயனபடு கீர்த்தனபடு சரஸ்வதிபாய், பழைய னுர் கொச்சம்மாள் ஆகியோர்களின் காலம்சேப நிகழ்ச்சி களையும், அண்மைக் காலங்களில் அண்ணாசாமி பாகவதர், எம்பார் விஜயராகவாச்சாரியார். டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள், திருமுருக கிருபானந்தவாரியார், புலவர் கீரன் போன்ற எத்தனையோ அறிஞர் பெருமக்களின் கதா காலம் சேப நிகழ்ச்சிகளையும் பார்த்திருக்கிறேன். பார்த்துச் சுவைத் துத்தான் சொல்கிறேன். அது நாடக அம்சங்கள் நிறைந்த கலைதான் என்பதில் ஐயப்பாடே இல்லை.

ஆனால், இந்தக் கலையில் ஈடுபட்ட அறிஞர்களெல்லாம் அமானுஷ்யமான புராண இதிகாசக் கற்பனாவாத வர்ணனை களைச் சொல்வதன்றி, மனிதன் மனிதனாக மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான புதுமைக் கதைகளையோ, புரட்சிக் கருத்துகளையோ, வரலாற்று நிகழ்ச்சிகளையோ தாங்கள் சொல்லும் கதைக்கான கருப்பொருள்களாக எடுத்துக்கொள் வார்களானால், நாட்டுக்கும் மக்களுக்கும் நலம் பயப்பதாக இருக்கும். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் இவ்வகையில் முதன் முதல் முயற்சி செய்து கிந்தனார் கதா காலட்சேபம், அம்பதும் அறுபதும் கலாநிகழ்ச்சி போன்ற புரட்சிப் படைப்புக்களின் மூலம் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி அதனால் பெரும்பயன் விளைத்தார். அந்த நல்ல முயற்சி அவருக்குப்பின் தொடரக் காணோம்.

இதைப் போலவே, கிராமப் பகுதிகளில், துரோபதை யம்மன், மாரியம்மன், மதுரை வீரசாமி, காளியம்மன் ஆகிய கோயில்களில், உடுக்கை பம்பை முதலிய வாத்தியங்களையும் நாலைந்து பின்பாட்டுக்காரர்களையும் வைத்துக்கொண்டு, கையில் ஒற்றைச் சிலம்பை வைத்துத் தாளத்திற்கேற்ப அசைத்து ஒலியெழுப்பியவாறு, பாடியும் ஆடியும் பாரதக்