பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கவிஞர் கு. சா. கி.

கதை, துரோபதையம்மன் கதை, நல்லரவான் கதை, மதுரை வீரசாமி கதை போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இவர்கள் எழுப்பும் பம்பை உடுக்கை சிலம்பு ஆகிய ஒலியும், பாட்டொலியும், பாமர ரஞ்சகமாயும், பக்தியைத் தூண்டுவன வாகவும் இருக்குமாகையால், இவ்வொலியில் மனம் ஒன்றித் தன்னை மறந்து சிலபெண்கள் மருளும் ஆவேசமும் கொண்டு கூச்சலிட்டுப் பின் மயங்கிக் கீழே விழுவதும் உண்டு. இதுவும் ஒருவகை நாடக அம்சமே எனலாம்.

பாகவத மேளாவும், பகல் வேஷமும்

தஞ்சை மாவட்டத்தில் சாலியமங்கலம், ஊத்துக்காடு, மெலட்டுர், சூலமங்கலம் போன்ற சில சிற்றுார்களில் பாகவத மேளா என்ற பெயரில் ஒருவிதத் தெருக்கூத்து நாடகம் நடை பெறுவதுண்டு. அவைகள் அனைத்தும் புராணக் கதைகளா கவே இருக்கும்

மேற்படி நாடகத்தில் வடமொழி சுலோகங்கள், தெலுங்கு தமிழ் பாடல்கள் எல்லாம் கலந்த அவியலாக இருக்கும். இந்நாடகத்தில் கலந்துகொள்ளும் கலைஞர்கள் எல்லோரும் நன்கு படித்தவர்களாகவும், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் களாகவும், நல்ல சங்கீத ஞானமுள்ளவர்களாகவும் இருப்பார் கள். எல்லோரும் ஆடிக்கொண்டே பாடுவார்கள். இடை இடையே ஒன்றிரண்டு வார்த்தைகள் உரையாடல் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், அதிகம் தமிழ் கலவாத மணிப் பிரவாள நடையில் நடைபெற்றுவந்த நாகரீகத் தெருக்கூத்து என்று சொல்லலாம். அவையும் இப்போது அருகி, எங்கோ எப்போதோ ஒரு முறை அபூர்வமாக நடைபெறுவதாக அறி கின்றேன். இது ஒருவகை நாடகம். இவை மட்டுமின்றி நமது கிராமியக் கலைகளில் இன்னும் உயிர்ப்போடு விளங்கும் கும்மி, கோலாட்டம், கரகம், காவடியாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகிய கலை கள் எல்லாம்கூட, ஒருவகையில் நாடக அம்சம் கொண்டவை என்றே கருதவேண்டும்.