பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 95 .

மற்றும் பெரு நகரப் பகுதிகளில், சிற்சில சமயங்களில் ஐந்தாறு பேர்களைக் கொண்ட ஒரு சிறு குழுவினர்கள், பகல் வேஷக்காரர்கள் என்ற பெயரில், பல்வேறு கதா பாத்திரங் களாக வேடம் பூண்டு, ஏதேனும் ஒரு புராண நாடகத்தில் வரும் சிறுசிறு கட்டங்களைத் தினசரி நமது வீடுகளுக்கு வந்து நடித்துக் காட்டிக் கடைசி நாளில் பட்டாபிஷேக காட்சியை முடித்துக் கொண்டு நன்கொடை கேம்பதைப் பார்த்திருக்கிறோம். ஒப்பனைக்கலை எத்தனையோ மாற்றம் பெற்றிருக்கும் இக்காலத்திலும் இந்தக் கலைஞர்கள் அரிதாரம் போன்ற சாதாரண முகப்பூச்சுக்களுடனேயே தோன்றி, அற்புதமாக நடித்தும், பாடியும் நம் உள்ளங்களை யெல்லாம் கவரும் ஆற்றலைக்கண்டு நான் எத்தனையோ முறை வியந்து மகிழ்ந்து பாராட்டியிருக்கிறேன். இக்கலையும் அழியாது காக்கவேண்டிய ஒன்றாகும் என்பது என் கருத்து.

இசைக் கருவிகள்

யான் இதுகாறும் கூறிய நாட்டியம் நாடகம் உள்ளிட்ட கூத்துவகைகளுக்குத் துணை இன்னியங்களாக இன்னிசைக் கருவிகளாகப் பண்டைத் தமிழர்கள் பயன்படுத்திய கருவி களின் பட்டியலைப் பார்த்தாலே வியப்பைத் தருகின்றன. பட்டியலைப் பாருங்கள்:

யாழ் - குழல் - முழவு. தண்ணுமை - இடக்கைபேரிகை - படாகை - படகம் - உடுக்கை - மத்தளம்சுத்த மத்தளம் - சல்லிகை - கரடிகை - திமிலைகுடமுழா - களப்பறை- தமருகம் - தடாரி - அந்தரிஅரசு - சந்திரவளையம் - மொந்தை - நிசாளம்கண்விடு தும்பு - துடிமை - சிறுபறை அடக்கம்தருணிச்சம் - விரலேறு - பாகம் - உபாங்கம்நாழிகைப்பறை துடி - பெரும்பறை . பதளைதுருத்தி - சிறுவங்கியம் - பெருவங்கியம் - நெடுவங் கியம் - சல்லி - தடப்பறை - குறுந்தும்பு - கேர்டுஆகுளி - பாண்டில்.