பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கவிஞர் கு. சா. கி.

போன்ற எத்தனையோ இசைக் கருவிகள் இருந்திருக்கின்றன இவற்றுள்,தோல்,துளை, நரம்புக்கருவிகளாகிய முழவு,குழல், யாழ் ஆகிய மூன்று சொற்களிலும் தமிழ்மொழிக்கே சிறப் பைத்தரும்-ழ-கரம் இடை எழுத்தாக இடம் பெற்றிருத்தல் சிந்திக்கத் தக்கதாகும்.

இம்மூவகைக் கருவிகளிலும் நாத வேறுபாடுகளும் உருவ வேறுபாடுகளும் கொண்ட பல்வேறு இசைக் கருவிகளும் இருந்திருக்கின்றன.

இசைக்கருவிகளுக்கு பண்டைய இலக்கியங்களில் இன்னியம், வாச்சியம் என்ற சொல்லே கையாளப் பெற்றிருப் பதைக் காணுகின்றோம். வாச்சியம் என்ற தமிழ்ச் சொல்தான் பிற்காலத்தில் வாத்தியம் என்று மருவியது போலும்.

பண்டைய நாடக இலக்கியங்கள் எங்கே?

அகத்தியம் முதல் பல்வேறு நாடக இலக்கண நூல்கள் இருந்தனவென்றும், இலக்கியங்கள் பல தோன்றிய பிறகு தான் இலக்கணம் தோன்றுதல் இயல்பென்றும், அவைகளில் பல அழிவுற்றமைக்குக் காரணம், வேற்றினத்தினர், வேற்று மதத்தினர். வேற்று மொழியினர் ஆகியோரின் ஆட்சியும், கலாச்சாரப் படையெடுப்புமே என்றும் கூறினேன்.

அவை தவிரவும், வேறு ஒரு காரணம் இருக்கக்கூடு மென்றும் நினைக்கின்றேன்.

பண்டைய நாடகங்கள் அனைத்துமே இயலும் இசையும் கலந்த பாடல்களாகவே இருந்திருக்கின்றன. அவைகள் யாவும் பண்டைய தமிழிசைப்பண் வழிப்பட்ட பாடல்களாகவே இருந்திருத்தல் வேண்டும். அக்கால இயல் இசை நாடகக்

கலை மிக நுட்பமான கலையாகும். சுமார் பதினோரா